astrology dinamani
ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 9
2016/06/15

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வேகத்துடன் விவேகமாய் இருக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். சுபச்செலவு ஏற்படலாம்.

பயணங்களின் போது  எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள்  காலதாமதமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை  கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை. கலைத்துறையினர் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: மஞ்சள், வெள்ளை

எண்கள்: 1, 3, 5

Previous Post
Next Post