astrology dinamani
ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 4
2016/06/15

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிலும் பின்வாங்காத அஞ்சா நெஞ்சம் உடைய நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் சுபச்செலவு ஏற்படும். காரியங்களில் இருந்த தாமதம் நீங்கும். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தடைகள் உடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். எதிர் நோக்கியியிருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம்.

நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. எந்த சூழ்நிலையிலும் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது சிறந்தது. பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு தனவரவு கிட்டும். அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று அம்மனை வணங்கினால் உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – வியாழன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்

எண்கள்: 2, 6

 

Previous Post
Next Post