astrology dinamani
ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 2
2016/06/15

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதை செய்தாலும் அதில் உள்ள லாப நஷ்டங்களை கணக்கிடும் குணமுடைய இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் உற்சாகம் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் அகலும். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். பணத்தை கையாளும் போது கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு  சமையல் செய்யும்போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு  இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

பரிகாரம்:  அபிராமி அந்தாதி படித்து அம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – வெள்ளி

திசைகள்: மேற்கு, வ்டமேற்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 6

Previous Post
Next Post