astrology dinamani
ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 1
2016/06/15

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஒரு பக்கம் சாதகமாகவும், மறு பக்கம் பாதகமாகவும் நடந்து கொள்ளாமல் அனைவரிடமும் ஒரே நிலையை கடைபிடிக்கும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. குடும்ப நிம்மதி குறையக்கூடும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். உறவினர்கள் வகையில் வீண் கருத்து மோதல்கள் ஏற்படலாம்.

பெண்களுக்கு செலவு அதிகாரிக்கும். கலைத்துறையினர் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும். அரசியலில் உள்ளவர்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3, 9

Previous Post