astrology dinamani
ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 7
2016/06/15

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நேர்மையும் அதிக செயல்திறனும் கொண்ட ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் நினைத்த காரியங்களை செவ்வனே செய்து முடிக்கும் திறன் அதிகரிக்கும். எண்ணிய காரியங்களை  திறமையாக செய்து முடிப்பீர்கள். தனாதிபதி சுக்கிரனின் உச்ச பலத்தால் பணவரவு  இருக்கும். எதிர்பார்த்த  இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

சில முக்கியமான  முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் உங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். சிற்றின்ப செலவுகள் கூடும். பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களில் முடிவெடுப்பதில் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு மனதில் தைரியம் குறையும்.

அரசியல்வாதிகளுக்கு மனகவலை குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று விநாயகர் அகவல் படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 2, 5, 6

Previous Post
Next Post