பூராட நட்சத்திரப் பலன்கள் (தனுசு)

பிரம்மிக்கத்தக்க அறிவு உள்ளவர்கள். எதையும் நுணுக்கமாக ஆராயும் தன்மை உள்ளவர்கள். தாங்கள் ஈடுபடும் காரியம் எதுவாக இருந்தாலும் முடிவு இப்படித்தான் என்ற முடிவுக்கு வருவார்கள்.

வாதத்தில் மிஞ்ச முடியாது. பொய்யே சொன்னாலும் உண்மை என்று நம்பவைப்பார்கள். எப்படிப்பட்டவரையும் தங்கள் வாக்கு சாமர்த்தியத்தால்  கவர்ந்திழுக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.

சரியோ, தவறோ, தான்  போகும் பாதை சரியென்று நினைப்பவர்கள். பெரும்பாலும் அடுத்தவர் அறிவுரையை ஏற்பதில்லை. தன்வழி தனிவழி என்று தனிப்பாதை போடுபவர்கள்.

தைரியசாலியாக காட்டிக்கொண்டாலும்  உள்ளுக்குள் அச்ச உணர்வு இருக்கும். நிரந்தரமான  நண்பர்கள் அமைவதில்லை. பழமையான பொருட்களை சேகரிக்கும் ஆசை உள்ளவர்கள். இந்த  நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 32 வயதுவரை  சோதனை காலமாகவே இருக்கும். அதன் பின் சாதனை காலமாக மாறும். பெற்றவர்கள் அன்பு, ஆதரவு அதிகம் கிடைப்பதில்லை. திருமணம் காலம் கடந்து நடக்கிறது. அப்படி அமையும் வாழ்க்கையிலும் கருத்து வேறுபாடுகள், பூசல்கள் இருந்து கொண்டே இருக்கும்.

நட்சத்திர அதிதேவதை :- வருணன்
பரிகார தெய்வம்  :- துர்க்கை
நட்சத்திர கணம்  -: மனுஷ கணம்
விருட்சம்   : வஞ்சி
மிருகம்   -: ஆண் குரங்கு
பட்சி   : -கௌதாரி
கோத்திரம்  : புலஸ்தியர்

Previous Post
Next Post