astro_dinamani
பூணூல் அணிவதன் தாத்பரியம் என்ன?
2017/08/07

பூணூல் அணிவதன் தாத்பரியம் என்ன?

மந்திரங்களில் ராஜ மந்திரம் என்று கருதப்படுவது காயத்ரி மந்திரமாகும். நியமனப்படி காயத்ரியை ஜபிக்கும் ஒருவன் ஞானத்திலும், தேஜஸ்திலும் சிறந்தவனாக இருக்கிறான். ஒரு தாய் தனது குழந்தையை காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை சிதற விடாமல் காக்கிறது.

இந்த மந்திரத்தை சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்து விட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும். பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர்.

பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள். இவ்வாறு, முற்காலத்தில் குடும்பத் தலைமை, சமூகத் தலைமையைக் குறிக்க அணிவிக்கப்பட்ட பூணூல் பின்னர் மெய்யியல் தெளிவு பெற்றோரைக் குறிப்பதாக மாறிப் பின்னர் ஒரு குறிப்பிட்ட சாதியாரின் தனிவுடைமையாகிய கதையாகி விட்டதாம்.

இன்று பூணூல் அணிவது, பெரும்பாலும் பிராமணர்களாக இருந்தாலும், பொற்கொல்லர்கள் (தட்டார்கள்) பூணூல் அணிந்திருப்பதை ஓர் உரிமையாகவும் சடங்காகவும் வைத்துள்ளனர். பூணூல் மூன்று புரி நூல்கள் இருக்கும்.

Previous Post
Next Post