astrology dinamani
புரட்டாசி மாத பலன்கள் – மகரம்
2017/10/21

(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)ஆவணி மாத பலன்கள்

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி பாக்கிய ஸ்தானத்தில் இருந்த புதன்
பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தொழில் ஸ்தானத்தில் இருந்த குருபகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி தொழில்
ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
எதை பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்தும் மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க
வேண்டிய காரியங்களும் நடக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுகஸ்தானாதிபதி ராசியில் சஞ்சாரம் செய்வதால் வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது
மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். தாய் வழி உறவினர்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள். அவர்களுடன் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

தொழில் ஸ்தானத்தில் குரு, புதன், சுக்ரன் என அனுகூலமான கிரகங்களின் கூட்டமைப்பு இருப்பதால் உங்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அவர்கள் உங்களின் நம்பிக்கைக்கு
உகந்தவர்களாகவும் இருப்பார்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

உத்யோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். உங்களுடன் பணிபுரியும் பெண்களால் உங்களுக்கு சில ஆதாயம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
அரசயில்வாதிகள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி, பொறுப்புகள் உங்களையே வந்தடையும். எதிர்பார்த்த ஒவ்வொரு விசயங்களிலும் நன்மையே கிட்டும். எதிரிகளைவிட உடனிருப்போரிடம் கவனம்
வையுங்கள்.

கலைத்துறையினர்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தவர்கள், சிறுசிறு துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை பெறமுடியும். புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போகிறீர்கள்.

பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் அகலும். தொழில் செய்யும் பெண்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மாணவர்களின் கற்கும் திறன் மேம்படும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். தொழிற்கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

திருவோணம்:
இந்த மாதம் மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் நன்மையும் சிரமமும் கலந்த பலன் உண்டாகும். தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்துவிடுவீர்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 30; அக்டோபர் 1
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்கி வர தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

Previous Post
Next Post

Leave a comment