astrology dinamani
புரட்டாசி மாத பலன்கள் – கடகம்
2017/10/21

(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

 

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதிதைரிய, வீர்ய
ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் சுகஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு சுக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பூர்வ, புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி சுக ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் கடகராசி அன்பர்களே!. இந்த மாதம் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலக்கூடிய காலகட்டம். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும்.

குடும்பாதிபதி தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப முடிவுகளை நீங்களே துணிந்து எடுப்பீர்கள். இளைய சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மாறும். பிள்ளைகளின் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதியே பார்ப்பதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சுலபமாக சாதிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் உங்கள் ராசிக்கு குருபார்வை கிடைப்பதன் மூலம் பதவி உயர்வு, சம்பள உயர்வு கட்டாயமாக கிடைக்கப் பெறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உங்கள் வளர்ச்சியின் மீது பொறாமைப்படுபவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை
குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.

பெண்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். சகல ஐஸ்வர்யங்களும் குருபார்வையால் கிடைக்கபெறுவீர்கள். நன்மைகள் அதிகம் நடக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கிடைக்க வேண்டிய சலுகைகள் குறித்த நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள்.

புனர்பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் புத்திரர் நன்கு படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர். வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் பெறுவர். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகமுண்டு.

பூசம்:
இந்த மாதம் உடல் ஆரோக்கியத்துடன் திகழும். மூத்த சகோதரர்கள் முக்கிய தருணங்களில் தகுந்த ஆலோசனை கூறி வழிநடத்துவர். குடும்ப ஒற்றுமை சிறந்தோங்கும்.

ஆயில்யம்:
இந்த மாதம் கணிசமாக அளவில் கையிருப்பு உயரும். வெளியூர் பயணத்தை லாபநோக்கில் நடத்தி வெற்றி காண்பீர்கள். திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 22, 23,24
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 17; அக்டோபர் 12, 13, 14
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
பரிகாரம்: உடல் ஊனமுற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

Previous Post
Next Post

Leave a comment