astrology dinamani
புரட்டாசி மாத பலன்கள் – விருச்சிகம்
2017/10/21

(விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி லாப ஸ்தானத்தில் இருந்த புதன்
பகவான் அயன, சயன, போக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு அயன, சயன, போக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி அயன, சயன,போக ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனிக்கும் விருச்சிகராசி அன்பர்களே! இந்த மாதம் பணிகளில் கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் நன்மை கிடைக்கும். வெளியூர்
பயணம் செல்ல நேரிடும்.

குடும்பஸ்தானத்தில் பகை கிரகமான சனி பகவான் இருந்தாலும், மாதத்தின் பிறபகுதியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு வருவதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு நடக்கும், இது நாள் வரையில் திருமணத்திற்கு இருந்த தடைகள் நீங்கி திருமணம் நடக்கும். மனகசப்புகள் நீங்கி நிம்மதி பிறக்கும்.

தொழில் ஸ்தானாதிபதி சூர்ய பகவான் இந்த மாதம் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதாலும், நாடிப்படி செவ்வாய் மற்றும் கேது சம்பந்தம் பெறுவதாலும் லாபம் அதிகரிக்கும். வாய் சாமர்த்தியத்தால் சிலர் லாபம் பெறுவர்.

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் உழைப்பிற்காக பாராட்டப்படுவீர்கள். வேலைப்பளு ஓரளவு குறைந்து மன நிம்மதி கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

கலைத்துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

பெண்களுக்கு வாழ்வின் முக்கிய காலகட்டமாக இருக்கும். கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விருதுகல் கிடைக்கும். மாணவர்களுக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் முக்கிய கட்டத்தை நீங்கள் கடப்பீர்கள். எனவே கவனமுடன் இருப்பது நல்லது.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் அரசியல் பணிக்கு புத்திரர்களாலான உதவிகளைச் செய்வர். எதிரிகள் தாமாக விலகிச் செல்வர். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும் . வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

அனுஷம்:
இந்த மாதம் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று பணிகளை கவனிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை.

கேட்டை:
இந்த மாதம் ஒரு முறைக்கு இருமுறை தொழில் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன் யோசிப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 2, 3
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 25, 26
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மல்லிகை மலர் வாங்கித் தர திருமணத்தடை நீங்கும்.

Previous Post
Next Post

Leave a comment