astrology dinamani
புரட்டாசி மாத பலன்கள் – மீனம்
2017/10/21

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு ரண, ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி களத்திர ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செயல்படும் மீன ராசி அன்பர்களே! பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும். எந்த ஒரு
காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

குடும்பாதிபதி செவ்வாய் பகவான் கேதுவுடன் இணைந்து தனது ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. தாயார் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் நல்ல சுமூகமான
உறவு ஏற்படும். உங்களின் வார்த்தைக்கு குடும்பத்தில் மரியாதை இருக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

தொழில் செய்பவர்களுக்கு லாப ஸ்தானத்தில் இருக்கும் கேது பகவானால் தாயார் அல்லது தாய் வழி உறவினர்களால் நல்ல செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மேம்படும். புதிய வாடிக்கையாளர்கள் உங்கள் வாக்கு திறமைக்கு கிடைப்பார்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்து சில கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். இதனால் வேலை நேரம் அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் அரசு சம்மந்தமான பிரச்சனைகளை மற்றவருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்க வேண்டாம். சில விஷமிகளின் தொந்தரவு
இருந்தாலும் சுலபமாக சமாளித்து விடுவீர்கள்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். நல்ல சூழ்நிலைகள் அமையப் பெற்று அதனால் மன மகிழ்ச்சி உண்டாகலாம். மூத்த கலைஞர்கள் நல் ஆசி வழங்குவார்கள்.

பெண்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சுய கௌரவம் காக்கப்படும்.

மாணவர்கள் தேவையில்லாத கலந்துரையாடல்களை தவிர்த்தல் நல்லது. உங்களுடன் இருப்பவர்களே உங்களை காட்டிக் கொடுக்க நேரிடும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும்.

ரேவதி:
இந்த மாதம் குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம்.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 4, 5
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
பரிகாரம்: சிவன் ஆலயங்களுக்குச் சென்று வர மனதில் தெளிவு பிறக்கும்.

Previous Post

Leave a comment