astrology dinamani
புரட்டாசி மாத பலன்கள் – மேஷம்
2017/10/21

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் ரண, ருண,ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி ரண,
ருண,ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் களத்திரஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு களத்திரஸ்தானத்தில் இருந்த குருபகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு
பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி களத்திரஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். எதிர்ப்புகள்
அகலும்.

குடும்பத்தில் உடல்நிலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். அவ்வப்போது வண்டி, வாகனங்கள் பழுது ஏற்பட்டு டென்ஷனை உண்டு பண்ணும். ஆறில் புதன் ஆட்சியாக இருப்பதால் கலைகளில் ஆர்வம் உண்டாகும். தாய்மாமன் ஆதரவு உங்களுக்கு கிடைக்கப் பெறுவீர்கள். கடன்கள் ஏதேனும் இருப்பின் அதற்கு இப்போது பதில் சொல்ல வேண்டி வரும்.

தொழிலைப் பொறுத்தவரையில் உங்களது பத்தாமிடமான செவ்வாய் கேது பகவான் சேர்க்கை உங்களுக்கு சில குழப்பங்களை தரலாம். ஆனால் தெய்வ அனுகூலத்தால் அது உங்களை பாதிக்காத
அளவிற்கு முடிவெடுப்பீர்கள்.

உத்தியோகத்தில் சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் அது பெரிய அளவில் தலை தூக்காது. உங்களிடத்தை ஒருவராலும் நிரப்ப இயலாது என்பதை உங்கள் மேலதிகாரிகள் புரிந்து கொள்வார்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.

அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம்
வரலாம்.

பெண்களுக்கு வார்த்தையை புரோயகிப்பதில் கவனமாக இருக்கவும். மற்றவர் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டி வரலாம், மாணவர்கள் படிப்பில் அதிக சுமையை சுமக்க வேண்டி வரலாம். சிலர் கல்விச்சுற்றுலா சென்று வருவீர்கள்.

அஸ்வினி:
இந்த மாதம் வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்க வைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர்.

பரணி:
இந்த மாதம் உத்யோகஸ்தர்கள் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையில் இருந்து விடுபடலாம். சகபணியாளர்களால்
பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கூடும்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. ஆரம்ப, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்,
பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம்.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 17; அக்டோபர் 12, 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 6, 7
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
பரிகாரம்: சிவப்பு அரளியைக் கொண்டு துர்கைஅம்மனை வழிபடவும்.

Next Post

Leave a comment