astrology dinamani
புரட்டாசி மாத பலன்கள் – தனுசு
2017/10/21

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி தொழில் ஸ்தானத்தில் இருந்த
புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு லாப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் அயன,சயன, போக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர்
11ந்தேதி லாப ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
தங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கப் பெறும் தனுசு ராசி அன்பர்களே! விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ
இல்லாமல் ஈடுபடுவீர்கள்.

குடும்பாதிபதி சனி பகவான் ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் கணவன் – மனைவிக்கிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பஸ்தானத்தில்
இருக்கும் செவ்வாய் மற்றும் கேது பகவான் சேர்க்கை உங்கள் மீது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சொல்ல வழி கோலும். கவனம் தேவை.நீங்கள் எது செய்வதாக இருந்தாலும் குடும்பத்தினருடன்
தெரிவிப்பது நல்லது.

தொழில் ஸ்தானாதிபதியும் லாப ஸ்தானதிபதியும் இணைந்து லாப ஸ்தானத்தில் இருப்பதால் வர வேண்டிய பணம் தாமதம் இல்லாமல் வந்து சேரும். தந்தை செய்யும் தொழிலை செய்பவர்களுக்கு
யோகமான காலகட்டம். இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சிலர் புதிய யுக்திகளை அனுபவமிகுந்தவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்திற்கு இடம் தர வேண்டாம். மூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக
இருந்து நம்பிக்கை அளிப்பார்கள்.

கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய
விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

பெண்களுக்கு கிடைக்க வேண்டிய பூர்வீக சொத்துகள் கிடைக்கும். சிலருக்கு வழக்கில் சாதகமான போக்கு காணப்படும்.

மாணவர்களுக்கு வாழ்வில் முக்கியமான காலகட்டமாக அமையும். சில நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.

மூலம்:
இந்த மாதம் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும்

பூராடம்:
இந்த மாதம் வீண் ஆசைகள் மனதில் தோன்றும். உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன்
கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 27, 28, 29
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்,
பரிகாரம்: முருகனுக்கு அரளி பூ மாலை சாற்றி வழிபட குடும்ப பிரச்சனைகள் அகலும்.

Previous Post
Next Post

Leave a comment