astrology dinamani
புரட்டாசி மாத பலன்கள் – துலாம்
2017/10/21

(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

 

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி அயன,சயன, போக ஸ்தானத்தில் இருந்த புதன்
பகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு ராசியில் இருந்த குருபகவான் தனம், , குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி ராசியில் இருக்கும்
சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய துடிக்கும் துலாராசி அன்பர்களே! இந்த மாதம் வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய
காரியங்கள் தாமதப்படும்.

ராசியாதிபதி சுக்ரன் ராசியிலேயே குருவுடன் சஞ்சாரம் செய்வதால் தடைபட்டிருந்த திருமணங்கள் நல்ல படியாக முடியும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள்
உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள். உடலில் இருந்த பிரச்சனைகள் குணமாகும். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல்நிலையிலும் முன்னேற்றம் இருக்கும்.

தொழில் ஸ்தானத்தில் ராஹூ பகவான் சஞ்சரிப்பதால் கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபம் உண்டாகும். எனினும் கவனமுடன் செயல்பட வேண்டும். புதிய ஆர்டர்களை எடுப்பதை தவிர்க்க
வேண்டும். பண வரவு சீராக இருக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு வர வேண்டிய பணம் சிறிது காலதாமதத்திற்குப் பிறகே வந்து சேரும். மேலதிகாரிகள் உங்களை வேலை வாங்குவது போல் இருந்தாலும் அவர்களின் கடமையைச் செய்வதால்
நீங்களும் எதையும் எதிர்பார்க்காமல் உங்களுக்கு கொடுக்கப்படும் வேலையைச் செய்யுங்கள்.

அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள்.

கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.

பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மனதில் மகிழ்ச்சி பிறக்கும். குடும்பத்துடன் நாட்களை கழிப்பீர்கள்.
மாணவர்களுக்கு படிப்பிற்காக கிடைக்க வேண்டிய உதவித் தொகைகள் கிடைக்கும். வெளியூர் சென்று சிலர் செய்முறைக் கல்வியினை கற்று வருவீர்கள்.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் பணிச்சுமையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்வி வளர்ச்சி காண்பர். சக மாணவர்கள் மத்தியில் நற்பெயர் உருவாகும்.

சுவாதி:
இந்த மாதம் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். படிப்பு முடித்துவிட்டு, வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்த மாதம் அரசியல்வாதிகள் மற்றும் சமூகநல சேவகர்களுக்கு இதுநாள்வரை செய்து வந்த சமூகப்பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு தாமாக வந்து சேரும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 30; அக்டோபர் 1
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 22, 23,24
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
பரிகாரம்: நவகிரக சுக்கிர பகவானுக்கு மல்லிகை மலர் வாங்கிக் கொடுப்பது நல்லது.

Previous Post
Next Post

Leave a comment