astrology dinamani
புரட்டாசி மாத பலன்கள் – சிம்மம்
2017/10/21

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசியில் இருந்த சூரிய பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தைரிய, வீர்ய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.  அக்டோபர் 11ந்தேதி தைரிய, வீர்ய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிக்க கூடிய சிம்ம ராசி அன்பர்களே! எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக
உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும்.

குடும்பஸ்தானத்தில் ராசிநாதன் சஞ்சாரம் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பாதிபதி புதன் பகவான் குரு, சுக்ரனுடன் இணைந்து இருப்பதால் பெண்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

தொழில் ஸ்தானாதிபதி ஆட்சியாக இருப்பதுடன் புதன் மற்றும் குருவுடன் இணைந்து உங்களுக்கு சுப பலன்களையே தருகிறார். நிறைய புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். இதை பயன்படுத்திக்
கொள்ளுங்கள்.

உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் இருக்கும் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.

கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு கணவனுடன் இருந்த மனகசப்புகள் தீர்ந்து சுமூகமாக இருக்கும். நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் உண்டாகும்.

மாணவச் செல்வங்களுக்கு ஆசிரியர்களின் நன்மதிப்பை பெறக்கூடிய சூழ்நிலை உருவாகும். மகிழ்ச்சியான சூழ்நிலையில் மனம் லயிக்கும்.

மகம்:
இந்த மாதம் உங்களது மேலான யோசனைகளை உங்கள் உயரதிகாரிகள் ஏற்பார்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறும். எனினும் வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து
கொடுக்கவும்.

பூரம்:
இந்த மாதம் தைரியம் பிரகாசிக்கும். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 18, 19; அக்டோபர் 15, 16
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
பரிகாரம்: பிரதோஷம் நடைபெறும் நாட்களில் நந்தியெம்பெருமானை வழிபடுங்கள்.

Previous Post
Next Post

Leave a comment