astrology dinamani
புரட்டாசி மாத பலன்கள் – கன்னி
2017/10/21

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

 

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு அயன, சயன ,விரய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி ராசியில் இருந்த புதன் பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
அக்டோபர் 11ந்தேதி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய ஆசைப்படும் கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல்
தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும்.

குடும்ப சூழ்நிலையில் நல்ல முன்னேற்றம் அதிகரிக்கும். உங்களுடைய வாக்கு வன்மை அதிகரிக்கும். உங்களுடைய தனாதிபதி ஆட்சி பலம் பெற்றிருப்பதால் உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து
சேரும். புதிதாக வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். வராது என்று எண்ணிக் கொண்டிருந்த நீண்ட நாளைய கடன் வந்து சேரும். கடன்கள் அடைக்கப் பெறுவீர்கள்.

தொழில் ஸ்தானாதிபதி புத பகவான் உங்களுடைய வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்கள் தொழிலை விரிவு படுத்துவதற்கான நிதிஉதவிகள் கிடைக்கப்
பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிட்டும்.

உத்தியோகத்தைப் பொறுத்தவரை சம்பள உயர்வு சன்மானம் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை விசயமாக பயணங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும்.

பெண்கள் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் வருகை மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும்.

மாணவக் கண்மணிகள் மனதில் தேவையில்லாத பயமும், கவலையும் தோன்றி மறையும். அனைவரும் உங்கள் மேல நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது.

அஸ்தம்:
இந்த மாதம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு
ஏற்படும்.

சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் எதிர்கால தேவை கருதி சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். நவீன எந்திரங்களின் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் திறமையை வெளிப்படுத்துவர்.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 27, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 20, 21; அக்டோபர் 17
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
பரிகாரம்: ஸ்ரீ மஹாலட்சுமியை வழிபட்டு குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்கள்.

Previous Post
Next Post

Leave a comment