astrology dinamani
புரட்டாசி மாத பலன்கள் – மிதுனம்
2017/10/21

(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி சுக ஸ்தானத்தில் இருந்த புதன்
பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
அக்டோபர் 11ந்தேதி பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
கஷ்டமில்லாத சுக வாழ்க்கை வாழ விருப்பமுடைய மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.

குடும்பத்தில் ஒருவிதமான அச்ச உணர்வு இருந்து கொண்டிருக்கும். உடன்பிறந்தவர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டு அகலும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு இருப்பதால் வார்த்தைகளை
கவனமாக பிரயோகியுங்கள். கடன்கள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சிலர் உங்களை நோகடித்தாலும் நீங்கள் அதை கண்டுகொள்ள மாட்டீர்கள்.

தொழிலைப் பொறுத்தவரை அனைத்து தொழிலும் உள்ளவர்கள் நன்மையை பெறுவார்கள். ஐந்தாம் பார்வையாக குருபகவான் உங்கள் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் நன்மைகள் தொழிலில்
நடைபெறும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கண்காணிப்புக்கு ஆளாவீர்கள். எனவே சரியான நேரத்தில் உங்களது பணிகளை நிறைவேற்றி வையுங்கள்.

அரசியல்வாதிகள் உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள். தெய்வீகப் பணிகளில் நேரடியாகவும் பின்புலமாகவும் இருந்து செயல்படுவார்கள்.

கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து வீடு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். தங்களுக்குத் தேவையான ஆடம்பர விஷயங்கள் போன்றவற்றில் கவனம்
செலுத்தாமல் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறுதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினை தீரும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் வந்து சேரும். மாணவர்கள் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு படிப்பிற்காக வாங்கவேண்டிய உபகரணங்களை வாங்குவீர்கள்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழி உண்டாகும்.

திருவாதிரை:

இந்த மாதம் மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். எந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகுவீர்கள். தம்பி, தங்கையின் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

இந்த மாதம் வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 20, 21; அக்டோபர் 17
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 10, 11
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
பரிகாரம்: புதன் கிழமைகளில் பெருமாளை தரிசித்து வாருங்கள்.

Previous Post
Next Post

Leave a comment