astro_dinamani
ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் : ரிஷபம்
2015/04/13

rishabam

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் வரவேண்டிய பணம் தானாகவே கைவந்து சேரும். கடமைகளை கருத்துடன் செய்து முடிப்பீர்கள். சுதந்திரமாக சுயசிந்தனையோடு முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் தரக்கூடிய செயல்களில் ஈடுபடுவீர்கள். செய்தொழிலில் போட்டி பொறாமைகள் குறைந்து காணப்படும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை அரவணைத்துச் சென்று அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே முடித்துவிடுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் அனுபவஸ்தர்களைக் கலந்தாலோசித்த பிறகே எடுக்கவும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, கௌரவம் உயரக் காண்பீர்கள். நேர்முக மறைமுக எதிரிகள் இந்த காலகட்டத்தில் உங்களை அண்ட மாட்டார்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து மனதிற்கினிய செய்திகள் வந்து சேரும். பழைய காலத்தில் தொடங்கி பாதி வழியில் விட்டிருந்த தொழிலையும் புதுப்பித்து நடத்துவீர்கள். புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். உங்கள் செயல்கள் சிறு தடைகளைச் சந்தித்தாலும் அவைகள் சரியான இலக்குகளை அடைந்து விடும். உடலில் இருந்த நோய்கள் மறைந்து பீடுநடை போடுவீர்கள். உணவு விஷயங்களில் சரியாக இருப்பீர்கள். பழைய கடன்கள் அனைத்தையும் முழுமையாக அடைத்து விடுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றிவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து நேர்வழியில் சிந்தித்துப் பணியாற்றுவீர்கள். குழந்தைகளை வெளியூர் வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். அரசு வழியில் இருந்த பிரச்னைகளும் தீர்ந்துவிடும். கடினமான சூழல்களில் மாட்டிக் கொண்டாலும் கடைசி நிமிடத்தில் எச்சரிக்கையடைந்து அவைகளிலிருந்து தப்பித்து விடுவீர்கள். “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று’ என்பது போல் இன்னல்கள் விலகும். உங்கள் பேச்சில் கண்ணியத்தைக் காப்பாற்றுவீர்கள். உடல் பலத்தைவிட மனபலம் அதிகரிக்கும். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் சகோதர சகோதரிகள் உங்களைத் தேடி வந்து உதவிகளைச் செய்து மகிழ்ச்சியில் திளைக்கச் செய்து விடுவார்கள் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஹேவிளம்பி ஆண்டில் அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தடைபட்டிருந்த ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வேலையில் பளு கூடாது. மேலதிகாரிகள் உங்களின் வேலையில் திருப்தி அடைவார்கள். முன்னறிவிப்பில்லாத சில வேலைகளையும் ஒப்படைப்பார்கள். இதனால் சிறிது அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாக நேரிடும். வியாபாரிகள் நல்ல முறையில் வியாபாரம் செய்து முன்னேற்றத்தைக் காண்பார்கள். வீண் பிரச்னைகளில் மாட்டிக் கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அவைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். நண்பர்கள் கூட்டாளிகள் நல்ல விதமாக உதவிகளைச் செய்வார்கள். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள் தங்களின் வியாபாரம் மூலம் அந்நியச் செலாவணியையும் அதிகம் பெறுவார்கள். விவசாயிகளுக்கு மகசூலில் ஓரளவு லாபம் கிடைக்கும். புதிய தானியங்களைப் பயிரிட்டும் பயன் அடையலாம். மாற்றுப் பயிர்களாலும் கால்நடைகளாலும் வருமானம் கூடும். நீர்ப்பாசன வசதிகளையும் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். மதிப்பு மரியாதை உயரும். அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கட்சி மேலிடம் உங்களின் செயல்களைப் பாராட்டும். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களும் புதிய வாய்ப்புகளைத் தேடித்தருவார்கள். ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். பெண்மணிகளுக்கு உடல்நலனில் சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய மருத்துவச் செலவுகள் உண்டாகாது. கணவர் வழி உறவினர்களின் மத்தியில் உங்கள் புகழ் உயரும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். வெளிவிளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். விரும்பிய பாடப் பிரிவுகளிலும் சேர்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ அனுமனை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post