astrology dinamani
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 – கும்பம்
2015/04/13

kumbam(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் அபிவிருத்தி அடையும். நீங்கள் எதிர்பார்த்தது கை வந்து சேர்ந்துவிடும். நல்ல செயல்களைச் செய்து உங்கள் பெருமையை கூட்டிக்கொள்வீர்கள். மனதில் நிம்மதி இருக்கும். வருமானம் சீராகவே இருக்கக் காண்பீர்கள். செய்தொழிலிலும் புதிய சூழல் உருவாகக் காண்பீர்கள். போட்டியாளர்கள் சற்று பின்தங்குவார்கள். உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களால் சில பிரச்னைகள் உருவாகும். அதனால் சிறிது விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிவரும். தாயாரின் உதவியும் கிடைக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். ஆன்மிகச் சிந்தனைகள் அதிகமாக இருக்கும். வழக்குகளிலும் எதிர்பார்த்த வாய்தா கிடைக்கும். நீங்கள் தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிக்கொள்வீர்கள். மறைமுக நேர்முக எதிர்ப்புகள் எவ்வளவு வந்தாலும் தாக்குப்பிடித்து விடுவீர்கள். திருமணமாகாமல் தவித்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும் காலகட்டமாக இது அமைகிறது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் கடினமான காரியங்களைக்கூட சுலபமாக முடித்துவிடுவீர்கள். வருமானம் பலவகையிலும் உங்களைத் தேடிவரும். ஸ்பெகுலேஷன் துறையின் மூலமும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் புத்திரபாக்கியம் இரண்டும் கைகூடும். நேர்முக எதிர்ப்புகள் எவ்வளவு வந்தாலும் தாக்குபிடித்து விடுவீர்கள். குடும்பத்திலும் ஒற்றுமை கூடும். புரிந்துகொள்ளாத உற்றார் உறவினர்கள் சகஜமாகப் பழகத் தொடங்குவார்கள். பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் இணைந்து வாழும் சூழ்நிலையும் ஏற்படும். உடலில் இருந்த உபாதைகள் மறையும். தோற்றத்தில் மிடுக்கு உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்களும் இந்த காலத்தில் விலகிவிடும். பெரியோரையும் ஆன்மிகத்தில் உயர்ந்தோரையும் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். ஆணையிடும் அதிகாரப் பதவிகள் உங்களை நாடி வந்து கோலோச்சும் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடினாலும் அதை கடின உழைப்பை மேற்கொண்டு சமாளிப்பார்கள். செய்யும் தொழிலில் இறக்கங்கள் இராது. உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அதை இந்த ஆண்டு பெறுவார்கள். உங்கள் மதிப்பு மரியாதை உயர்ந்தே காணப்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் சுமாரான பலன்களே கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்படினும் அவைகளை சுலபமாக சமாளிப்பீர்கள். வருமானம் சராசரிக்கும் அதிகமாக இருப்பதால் சிறிது செலவு செய்து கடையை அழகுபடுத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் சிறிது அலைச்சல் ஏற்பட்டாலும் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். விவசாயிகள் பயிர் விளைச்சலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அலைச்சல்கள் சற்று அதிகரித்தாலும் விவசாயப் பணிகளைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். பழைய பயிர்க்கடன்களும் அடைபட்டுவிடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். சக விவசாயிகள் மத்தியில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும் ஆண்டாக இந்த ஆண்டு அமைகிறது.

அரசியல்வாதிகள் சற்றும் அச்சமில்லாமல் செயல்படுவீர்கள். பணிகளை முழுமையாகச் செய்து முடிப்பீர்கள். பழைய சிக்கல்கள் மறையும். உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவு அளிப்பார்கள். தொண்டர்களும் உங்கள் கருத்துக்கு மதிப்பு கொடுப்பார்கள். வெளியூரிலிருந்து வரவேண்டிய பணமும் வந்து சேரும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வருமானம் கிடைக்கும். உங்கள் வேலைகளைச் சரியாக முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். சக கலைஞர்கள் பகைமை மறந்து நட்பு பாராட்டுவார்கள். புதிய ஒப்பந்தம் தேடிவரும். புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பெண்மணிகள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருப்பார்கள். தாய்வழியில் ஆதரவு கூடும். வருமானத்திற்குக் குறைவு வராது. மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றமடைவார்கள். உடல் வலிமையும் மனவளமும் கூடும். ஆசிரியர்களும் பெற்றோரும் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

பரிகாரம்: சிவதரிசனம் உகந்தது.

Next Post