பரணி நட்சத்திரப் பலன்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல மனம் படைத்தவர்கள். தங்கள் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை தைரியமாக வெளியிடும் குணமிக்கவர்கள்.  மனசாட்சிக்கு விரோதமாக நடக்கமாட்டார்கள்.

பொதுவாக இவர்கள்  வாழ்க்கை வாலிபத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும்.  செல்வ செழிப்போடும், சீரும் சிறப்போடும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள்.  தொப்புளில் எள் வடிவில் சிறு மச்சமிருக்கும்.

நட்சத்திர அதிதேவதை – துர்க்கை
பரிகார தெய்வம்  – துர்க்கை
நட்சத்திர கணம்    – மனுஷகணம்
விருட்சம்   – நெல்லி  (பாலில்லா மரம் )
மிருகம்   – ஆண் யானை
பட்சி   – காக்கை
கோத்திரம்   – விசுவாமித்திரர்

Previous Post
Next Post