astro_dinamani
நோய் தீர்க்கும் தன்வந்திரி மந்திரம்
2017/08/29

நோய் தீர்க்கும் தன்வந்திரி மந்திரம்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய |
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய ||
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய |
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹே ||

ஸ்ரீ தன்வந்திரி பகவான் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் ஜெபித்து வந்தால் வியாதிகள் நீங்கும். மருந்துகள் உட்கொள்வதற்கு முன் இந்த மந்திரத்தை ஜெபித்து பின் மருத்துகளை எடுத்துக்கொண்டால் வியாதிகள் விரைவாய் நீங்கும்.

பெருமாள் ஆலயங்களில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் தன்வந்திரி பகவான் தனிக்கோயில் கொண்டு பிரதான மூர்த்தியாக விளங்கி மக்களின் உடற்பிணியை நீக்கி, உள்ளப் பிணியையும் போக்கி, உலக நன்மைக்காக வழிபாடு செய்யும் தனித்துவம் மிக்க ஆலயமாக அமைந்துள்ளது ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்.

ஓம் நமோ பகவதி மிருதசஞ்சீவினி சாந்தி குரு குரு ஸ்வாஹா ||

இந்த மந்திரத்தை உபயோகித்து இறந்தவர்களைக்கூட மீண்டும் உயிர் பெறச்செய்பவர் அசுரகுரு சுக்ராச்சாரியார். இம்மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து உடல் ஆரோக்கியம் பெறுங்கள். பிறருக்காக ஜெபித்தால் சாந்தி என்ற வார்த்தைக்கு முன்னதாக யாருக்காக ஜெபிக்கின்றீரோ அவருடைய பெயரை சொல்லி ஜெபிக்கலாம்.

Previous Post
Next Post

Leave a comment