astrology dinamani
நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்?
2018/07/10

நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்?

நான் பல ஆண்டுகளாகவே நிரந்தர வேலை இல்லாமல் சிரமப்பட்டு வருகிறேன். வருமானம் இல்லாததால் திருமணமும் செய்யவில்லை. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? சொந்த வீடு வாங்க முடியுமா? – வாசகர், மயிலாடுதுறை

பதில்

உங்களுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம் 3- ஆம் பாதம் என்று வருகிறது. லக்னத்தில் தனாதிபதியான சூரியபகவானும் உச்சம் பெற்ற பாக்கியாதிபதியான குருபகவானும் இணைந்து இருப்பது சிறப்பு. இதனால் சிவராஜயோகம் உண்டாகிறது. சனிபகவான் களத்திர, நட்பு ஸ்தானாதிபதியாகி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஆயுள் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். உங்களுக்கு புத்திர ஸ்தானாதிபதி தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். உங்களுக்கு இந்த ஆண்டிலேயே நிரந்தர தொழில் அமையும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும். 2022 -ஆம் ஆண்டுக்குப்பிறகு சொந்த வீடு அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

– கே.சி.எஸ் ஐயர்

Previous Post

Leave a comment