astrology dinamani
நாத்திகர்கள் இதைப் படிப்பதை தவிர்க்கவும்…
2017/06/12

நாத்திகர்கள் இதைப் படிப்பதை தவிர்க்கவும்…

கடவுளை நம்பினோர் ஒருக்காலும் கைவிடப்படார் என்ற பழமொழியை இந்தச் சம்பவம் உண்மையாகியுள்ளது.  வங்கியில் பணிபுரியும் எழுத்தாளர் சரவண குமார் அவர்களின் முகல்நூல் பதிவு இது.

ஓய்வு பெற்ற காவல்துறை எஸ்.பி ஒருவரிடம் பேசும் போது கடவுள் மேல் அவர் வைத்திருந்த அபாரமான பக்தி எப்படி அவரது உயிரைக் காப்பாற்றியது என்பதை விவரித்த போது, கேட்டதும் மெய் சிலிர்த்துப் போனோம்.

ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்திருந்தார். அப்போது அவருடைய செக்யூரிட்டி ஆபீஸராக நியமிக்கப்பட்டிருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே இந்த திட்டமிடல் எல்லாம்  முடிந்துவிடும். அதன் பிறகு எக்காரணம் கொண்டும் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படமாட்டார்கள்.

சம்பவம் நிகழ்ந்த அன்று வழக்கம் போல் பணிக்குச் செல்வதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென, கமிஷ்னரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நம்ம முகமது அலி ஹெலிகாப்டரில் போனதே இல்லையாம். ராஜீவ் காந்திக்கு பாதுகாப்பு அதிகாரியாக போக விருப்பப்படுகிறார். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் அவர் போகட்டுமா? என்றார். நான் சற்றும் யோசிக்கவில்லை தாராளமாக போட்டு வரட்டும் சார் என்றேன்.

நான் தீவிரமாக வணங்கும் தெய்வம் தான் என்னை அப்படிச் சொல்ல வைத்தது என நினைக்கிறேன். அன்றைய தினம் வெடிகுண்டு சம்பவத்தில் ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து முகமது அலியும் சிதறிப் போனார். மிகவும் வருத்தப்பட்டேன். அதே சமயம் கடவுள் அருளால் எமனின் பிடியில் இருந்து தப்பித்ததும் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் மிகுந்த வியப்பை தந்தது.

தற்போது, ரிடையர்ட் ஆகி 19 ஆண்டுகள் ஓடி விட்டன. இதுவரை பல்வேறு பதிப்பகங்களில் பல புத்தகங்கள் எழுதிவிட்டேன். அவை அனைத்தும் கடவுளையும், மகான்களையும் பற்றிய புத்தகங்கள். அவன் புகழ் பாடவே எனக்கு உயிர் பிச்சை கொடுத்தான் என நினைக்கிறேன் என்று சிலிர்த்துப் போய் சொன்னார். காரியம் ஒவ்வொன்றும் காரணமில்லாமல் இல்லை என்று பதிவு செய்துள்ளார்.

Previous Post
Next Post

Leave a comment