astrology dinamani
நாடி ஜோதிடம் பார்க்க விரும்புபவரா நீங்கள்?
2018/05/25

நாடி ஜோதிடம் பார்க்க விரும்புபவரா நீங்கள்?

ஆன்லைன் ஜோதிடம். ஏதோ கடமைக்கு செய்கிறோம் என்றில்லாமல் பிரபலமான ஜோதிடர்களைத் தொடர்புகொண்டு, அவர்களிடம் ஜோதிட ஆலோசனை பெற ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறது தினமணி.

தினமணியில் ஆன்லைன் ஜோதிடர்களின் வரிசையில் மேலும் ஒரு புதிய வரவாகப் பிரபல ஜோதிடர் ஒருவர் இணைந்துள்ளார்.

ஜோதிடர் கோவி.சுகுமார் அடிப்படையில் ஒரு நாடி ஜோதிடர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடத்திலும், நாடி ஜோதிடத்திலும் அனுபவம் பெற்றவர்.

இவர் தமிழ் தவிர, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி பேசுபவர்களுக்காக அந்தந்த மொழிகளிலும் பலன்களை சொல்லத் தயாராக உள்ளார்.

பலதரப்பட்ட மனிதர்களுக்கு பலதரப்பட்ட சோதனைகள். வேதனைகள். இதற்கெல்லாம் காரணம் கிரகங்கள். கிரகங்களின் தாக்கத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப நம் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டால், ஓரளவு பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். அதுதான் ஜோதிட சாஸ்திரம்.

தொழில் என்றில்லை, குடும்பச் சூழல், வீடு வாகன யோகம், கல்வியோகம், கடல் கடந்த பயணங்கள், மண வாழ்க்கை அமைப்பு என்று அனைத்தையும் சிறப்புடன் அமைத்துக் கொள்ளலாம் என்பதுதான் உண்மை. இப்போது தினமணியின் ஸ்பெஷல் கட்டண சேவையில் நான்கு பிரபல ஜோதிடர்கள் பலன் சொல்லக் காத்திருக்கிறார்கள். நீங்கள் தெளிவான பதிலைப் பெற விரும்பினால் அவர்களையும் நீங்கள் அணுகலாம்.

ஸ்பெஷல் – கட்டணச் சேவை – http://astrology.dinamani.com/

Previous Post
Next Post

Leave a comment