astro_dinamani
நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?
2014/12/24

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

நவரத்தின மோதிரம் எல்லோரும் அணியலாமா? அவ்வாறு அணிந்தால் ஏதேனும் கேடு விளையுமா? என்ற கேள்வி எல்லோரின் மனதில் தோன்றுவது இயல்பு.

நவரத்தின கற்கள் பதிந்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்டசாலி என்று தான் சொல்ல முடியும். நவஅம்சங்கள் உங்களுக்கு பொருந்தும். அதாவது சாதனைகள் படைப்பீர், எதிலும் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, பதவி என அனைத்தும் உங்களுக்கு தான். உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைப்பதோடு, வெற்றி கிடைக்கும்.

இந்த நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்…..?
மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள் மிருக சீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த நவரத்தினத்தை அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் . கிரகஸ்தர்கள்  (திருமணமானவர்கள்), இரவில் அணியக் கூடாது.   பெண்கள் நவரத்தின மோதிரத்தை அணிவதால் கிரக தோஷம் ஏற்படும்.

எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம். பிறவி எண் 2,7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்து பின்பு தான் அணிய வேண்டும்.

Previous Post
Next Post

Leave a comment