திருவோண நட்சத்திரப் பலன்கள் (மகரம்)

அமைதியானவர்கள், எதையும் ஊடுருவி, அலசி, ஆராயும் தன்மை மிக்கவர்கள். வெளிப்படையாக பேசினாலும் வெகுளி அல்ல. தனிப்பட்ட முறையில் தனக்கென ஒரு வட்டம் வரைந்து கொண்டு வாழ்க்கையை நடத்துவார்கள்.
பேசும் போதே சிரிக்கும் இவர்களுக்கு பின்னால் மிகவும்  கடினமான கோபம் ஒளிந்திருக்கும்.  மனதுக்கு பிடிக்கவில்லை  என்றால் சரவெடியாக வெடிக்கும் குணம் இருந்தாலும், உடனே கோபம் மறைந்துவிடும்.

உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். செய்த உதவிக்காக பிரதிபலன் எதிர்ப்பார்ப்பதில்லை. பொதுவாக திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்றத் தாழ்வான வாழ்க்கையே அமைகிறது.  ஒரு நாள் போல ஒருநாள் இல்லை என்கிற மாதிரி வசதியும், வறுமையும் மாறி மாறி வரும் என்றாலும் சராசரி வாழ்க்கையில் இருந்து சறுக்குவதில்லை. 30வயது வரை  வாழ்க்கையில் பலமாற்றங்கள் வந்து கொண்டே  இருக்கும். அதன்பிறகு சீரான வாழ்க்கை முன்னேற்றம் வந்து விடும். குடும்ப வாழ்க்கை விரும்பியவாரு அமையும்.

நட்சத்திர அதிதேவதை-  : விஷ்ணு
பரிகார தெய்வம்   :- அம்மன்
நட்சத்திர கனம் :- மனுஷ கனம்
விருட்சம்     :- எருக்கு
மிருகம்      :- பெண் குரங்கு
பட்சி       : நாரை அல்லது மாடப்புறா
கோத்திரம்    : அகத்தியர்

Previous Post
Next Post