astrology dinamani
திருமணம் எப்போது கைகூடும்? – வாசகர், சிதம்பரம்
2017/12/07

திருமணம் எப்போது கைகூடும்?  – வாசகர், சிதம்பரம்

கடந்த 5 ஆண்டுகளாக என் மகனுக்கு திருமணம் செய்ய முயற்சித்து வருகிறேன். ஆனால் இன்னும் கைகூடவில்லை. நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். திருமணம் எப்போது கைகூடும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? – வாசகர், சிதம்பரம்

======

உங்கள் மகனுக்கு லக்ன சந்தியாக வருகிறது. அதாவது கன்னியா லக்னம் முடிந்து துலா லக்னம் தொடங்கும் தருவாயில் பிறந்துள்ளார். அதனால் அவருக்கு துலாம் லக்னம் என்று கொண்டே பார்க்க வேண்டும். களத்திர ஸ்தானாதிபதி குருபகவான்களுடன் இணைந்திருக்கிறார். அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். மற்றபடி இதுவரை நீங்கள் செய்யுள்ள பரிகாரங்கள் சரியானது மற்றும் போதுமானது.

-கே.சி.எஸ் ஐயர்

Previous Post
Next Post

Leave a comment