astrology dinamani
தனுசு ராசிக்கார்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
2018/05/10

தனுசு ராசிக்கார்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?

தனுசு ராசிக்காரர்கள், தங்கள் உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி எந்தவித அக்கறையும் கவனமும் எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலும், இவர்களுடைய தோற்றப் பொலிவும் கவர்ச்சியும் உடற்கட்டும் ஆற்றலும் சக்தியும் சிறிதும் குன்றாமல் இயல்பாகவே சிறப்பாக அமைந்திருக்கும். இவர்களின் உற்சாக வேகத்தோடு வாழ்க்கையின் நலன்கள் வளர வளர அவையும் சேர்ந்து வளர்ந்து கொண்டேயிருக்கும். இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திவந்தால், வயதான முதுமைப் பருவத்திலும்கூட ஆரோக்கியமாகவும் கவர்ச்சியான தோற்றப்பொலிவோடும் விளங்குவார்கள்.

தனுர் ஸ்தானமானது தேவகுருவான பிரஹஸ்பதியின் ஆட்சி வீடாகையால், இவர்களிடம் எப்போதும் ஒருவகை தேஜஸ் கலந்திருக்கும். சிலர் தெய்வீகமான கவர்ச்சியுடன் திகழ்வார்கள். பொதுவாக இவர்கள் உயரமாகவும் விளையாட்டு வீரர்களுக்குரிய தேகக்கட்டு வாய்ந்தவர்களாகவும் விளங்குவார்கள். இவர்கள் இதயம் இயற்கையாகவே வலிமையாக இயங்கும் தன்மையுடையதாகும். இரத்த ஒட்டமும் ஒரே சீராக இயங்குவதாக அமைந்திருக்கும். எப்போதுமே உற்சாகமான மனப்போக்குடன் செயல்புரியும் இவர்கள் தங்கள் தோற்றத்தின் இயற்கைப் பொலிவை ஒழுங்காகவும் ஒரே சீராகவும் நிலைத்திருக்கும்படிக் காத்து வருவார்கள். துன்பங்களோ, துயரங்களோ, கவலைகளோ ஏற்பட்டாலும் அவை அவர்களின் வாழ்வையோ, உணர்வுகளையோ பாதிக்கும் படிச் செய்துவிட மாட்டார்கள். இருப்பினும் இவர்கள் தங்கள் உடலின் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

தனுர்ஸ்தானம் மனித உடலில் இடுப்பு, தொடைகள் இடுப்பு நரம்பு என்பனவற்றை ஆள்வதாகும். எனவே அவற்றின் ஆரோக்கியத்தில் தனுர் ராசிக்காரர்கள் எப்போதும்  அதிகக் கவனம் செலுத்திப் பாதுகாத்து வராவிட்டால் அவையே அதிகம் பாதிக்கப்பட்டு அவற்றாலேயே பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவர்களின் இடுப்பிலும், முதுகின் கீழ்ப்புறத்து மூட்டுகளிலும் தொடைகளிலும் ஏற்படும் கோளாறுகள் இவர்களின் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும். இதனால், இவர்கள் ஆரம்பகட்டத்திலேயே மருத்துவரை அணுகிச் சரிசெய்யலாம். அஜீரணம், மலச்சிக்கல், சிறுசீரக்கோளாறுகள் ஆகியவற்றால் அவதிப்படவும் நேரலாம். சிலருக்கு ஜலதோஷம், தலைகுத்தல் ஏற்பட்டு அவதிப்படலாம். அத்தகைய சமயங்களில் இவர்கள் மிகவும் மனச்சோர்வடைந்து விடுவார்கள். எந்த செயலில் ஈடுபட்டாலும் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படும்.

இவர்கள் உணவு அருந்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். தூக்கமின்றி இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருக்கக்கூடாது. மிகவும் கடினமான வேலைகளை தமது சக்திக்கு மீறிச் செய்யலாகாது. அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்வதோடு யோகாசனப் பயிற்சியில் முழுக்கவனம் செலுத்தவதுதான் இவர்களுடைய ஆரோக்கியத்தை விருத்தி செய்யும். இவர்கள் அன்றாடம் அருந்தும் உணவுப்பொருள்களில் சிலிகான் என்ற சத்துப்பொருட்கள் பதார்த்தங்களை அதிகமாப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. இயல்பாகவே இவர்களில் பலர் சிவப்பாகவும் அழகாகவும் இருப்பார்கள். இவர்களின் தோல் மிக மிருதுவாகவும் நுட்பமாகவும் அமைந்திருக்கும். எனவே இனிப்பு பொருட்கள்  அதிகமாகப் பயன்படுத்தினால் சிறுநீரக பாதிப்பு, கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுத்தும். பொதுவாகத் தனுர் ராசிக்காரர்களுக்கு தோல் நோய்கள் எளிதாகத் தொற்றிக் கொண்டுவிடும். இனிப்புப்பண்டங்கள் எலும்புகளிலும் பற்களிலும் உள்ள சுண்ணாம்புச் சத்தை அரித்துவிடக்கூடும். ஆகையால் இவர்கள் தங்களுடைய அழகான பற்கள் பலவீனப்பட்டு பற்சொத்தை ஏற்பட்டுவிடும். எனவே, ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.

மேனித்தோல் மிகவும் மென்மையாக அமைந்திருக்கும் இவர்களால் அதிக வெயிலையோ, அதிகக் குளிரையே தாங்கிக் கொள்ள இயலாது. இவர்கள் எத்தகைய திடமான உடற்கட்டு வாய்ந்தவர்களாயினும், உடல் நலத்தையும், ஆரோக்கியத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். யோகா பயிற்சி செய்வதால் முதுமையிலும் இளமை மாறாமல் தக்கவைத்துக் கொள்ளலாம்.

Previous Post
Next Post

Leave a comment