astrology dinamani
ஜூலை மாத எண்ஜோதிட பலன்கள் – 6
2019/05/09

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஆறாம் எண் அன்பர்களே, இந்த மாதம் பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம்  உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம்.

குடும்ப உறுப்பினர்களிடம் கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பெண்களுக்கு மனஅமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை இருக்கும். கலைத்துறையினருக்கு திடீர் செலவு உண்டாகும். அரசியல்துறையினர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீநரஸிம்மரை தினமும் வணங்கி வர காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.

Previous Post
Next Post