astrology dinamani
ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் – 4
2019/05/09

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வேகமாக எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் எதைத் தொட்டாலும் வெற்றிக்கனியை ருசிப்பீர்கள். சந்தோஷ தருணங்கள்  அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும்.

தொழிலில் அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூர பிரயாணங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பெண்களால் பெருமை சேரும்.  உத்தியோகஸ்தர்கள் தூர தேசம் பயணம் எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை உத்தரவாதம் கிடைக்கவிருக்கிறது. வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு  தகுந்த வேலை கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.

உங்கள் அந்தஸ்தும் சமுதாயத்தில் உயரும். பெண்கள் தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு தொழிலில்  சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது.

அரசியல்வாதிகள் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். மாணவர்கள் படிப்பினில் சாதனைகள் புரிவர். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும்  முடிப்பீர்கள். சுற்றுலா சென்று வருவீர்கள்.

பரிகாரம்: துர்க்கை  அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரிய தடைகள்  நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும்.

Previous Post
Next Post