astrology dinamani
ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் – 1
2019/05/09

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

 

நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

எந்த காரியத்தை செய்தாலும் லாபம் ஏற்படும். உடல் சோர்வு நீங்கும். வீண் பிரச்சனைகள் அகலும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் நீங்கி சுப உறவு உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும்.

தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவை கிடைக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது.

பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்:  ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.

 

Previous Post