astrology dinamani
ஜூலை மாத எண்கணித பலன்கள் – 7
2016/06/15

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அற்ப சிந்தனைகளுக்கு இடம் கொடாமல் கொண்ட கொள்கையில் தீர்க்கமான எண்ணமுடைய ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்தி சாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும்.

மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும்.

உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்கள் அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.

Previous Post
Next Post