astrology dinamani
ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் – 3
2019/05/09

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த கடினமான விஷயத்திலும் தெளிந்த நீரோடையாக முடிவெடுக்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் மன உறுதி அதிகரிக்கும். எதையும் கண்டு அஞ்சாமல்  பணியாற்றுவீர்கள். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை  தவிர்ப்பது நல்லது. வெளிவட்டார தொடர்புகளில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து  முடிப்பதற்குள் இருந்த தடங்கல்கள் நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பட்ட சிரமங்கள் குறையும். வேலைப்பளு  குறையும். உழைப்பு வீணாகும்.

அரசியல்துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.   மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருவிற்கு தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

 

Previous Post
Next Post