astrology dinamani
பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் – 2
2018/12/04

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உங்களது திறமையால் லாபத்தை பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும்.  குடும்பத்தில் உள்ள்வர்கள் மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள்.

உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டு விடுவார்கள். வீடு சம்பந்தமான இனங்களில் சிறிது சுணக்க நிலை ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.  கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

அரசியல்துறையினர் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்:  மகாலட்சுமியை பூஜிக்க பணபிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.

Previous Post
Next Post