சொந்தத் தொழில் செய்யலாமா? எந்தத் தொழிலை தேர்ந்தெடுக்கலாம்? – பெருமாள், சென்னை

சொந்தத் தொழில் செய்யலாமா? எந்தத் தொழிலை தேர்ந்தெடுக்கலாம்? – பெருமாள், சென்னை

நான் பி.காம் பட்டதாரி. வெளிநாட்டில் வேலை பார்த்து ஊருக்குத் திரும்பினேன். இங்கு வேலையேதும் கிடைக்கவில்லை. தற்போது வருமானமின்றி இருக்கிறேன். மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யலாமா? எப்போது வேலை அமையும்? சொந்தத் தொழில் செய்யலாமா? எந்தத் தொழிலை தேர்ந்தெடுக்கலாம்?

உங்களுக்கு மேஷ லக்னம். தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள தொழில் ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. தொழில் ஸ்தானாதிபதியை ஆட்சி பெற்றுள்ள நட்பு ஸ்தானாதிபதியும் பாக்கியாதிபதியுமான குருபகவானும் பார்வை செய்வதால் மறுபடியும் வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகம் உள்ளது. உடனடியாக முயற்சி செய்யவும். அதுவரை உள்நாட்டில் வேலை செய்வீர்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் ஓரளவு நல்ல வருமானம் கிடைக்கும் வேலை கிடைக்கும். சொந்தத் தொழில் செய்யக் கூடாது. கட்டின வீட்டை வாங்குவதே சிறப்பாகும்/

– கே.சி.எஸ் ஐயர்

Previous Post
Next Post

Leave a comment