சுவாதி நட்சத்திரப் பலன்கள் (துலாம்)

அமைதியை விரும்புகிறவர்கள். சுதந்திர மனப்பான்மையும் பிடிவாதத் தன்மையும், நிறைந்தவர்கள். பிறர் சொத்துக்களுக்கு ஆசைப் படாதவர்கள். தாங்கள் ஈடுபடும் காரியத்தில் தப்பு சொல்வதையோ, குற்றம் காண்பதையோ விரும்பாதவர்கள். பொதுவாக விமர்சனத்திற்கு விரோதிகள்.

தங்கள் சுதந்திரத்தில்  குறுக்கிடாதவரை மற்றவர்க்கு உதவி செய்வார்கள். தங்களுக்கு எதிரில் இருப்பவர் படித்தவரா, பாமரரா என்று பார்க்காமல் பழகும் குணம் பெற்றவர்கள்.

எதிரிகளாக எதிர்ப்பவர்களை பழிவாங்காமல் விடுவதில்லை. இளமை பருவமான 25 வயது  வரை எவ்வளவு செல்வ செழிப்புடனும் பிறந்திருந்தாலும் மனதாலும் உடலாலும் பல கஷ்டங்களை சந்திக்க நேரும். பின் மிதமாக ஆரம்பித்த வளர்ச்சி 60 வயதில் பொன்னான  வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.

குடும்ப வாழ்க்கையில்  கணவன் மனைவி இருவரும் ஒத்த மனதுடையவர்களாக இருப்பார்கள். அனுசரித்துப் போகும் குணமிக்கவர்கள்.

நட்சத்திர அதிதேவதை : வாயு பகவான்
பரிகார தெய்வம்    :- மஹாலக்ஷ்மி, துர்க்கை
நட்சத்திர கணம்    -: தேவ கணம்
விருட்சம்    :- மருதம் (பாலில்லா மரம்)
மிருகம்    :- ஆண் எருமை
பட்சி    :- தேனீ
கோத்திரம்   -: அகத்தியர்

Previous Post
Next Post