astro_dinamani
சித்திரை 2-ம் பாதம் நட்சத்திரப் பலன்கள் (கன்னி)
2013/11/23

மிகுந்த அறிவாளிகள். ஆனால் செயலில் முரட்டுத்தனமும், குரலில் கடுமையும் தெரியும்.  அடுத்தவர்களை பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.  தங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதையே செயல்படுத்த முயல்பவர்கள்.
சில சமயங்களில்  முன் யோசனை இல்லாமல் தங்கள் உள்ளக் கருத்தை சொல்லி விடுவார்கள்.  அதனால் அனேக பேருக்கு இவர்களை பிடிக்காது. இவர்கள் சொல்லும் சில விஷயங்கள் மூடத்தனமாக தோன்றும்.  ஆனால் அதுதான் பின்னாளில் நடக்கும்.

வாழ்க்கையில் ஏற்படும்  தடங்கல்கள் இவர்கள் முன்னேற்றத்தை பாதிக்காது.  தன்னுடைய தைரியம், கடின உழைப்பு, அறிவுக் கூர்மையால் வெற்றி காண்பார்கள். பொதுவாக இந்த  நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 22,27,30,36,39,43,48 வயதை நெருங்கும்போது பெரும் சரிவுகளையும், சங்கடங்களையும், கெட்ட சம்பவங்களையும் சந்திப்பார்கள். குடும்ப பாசம் அவ்வளவாக  இருப்பதில்லை.  அல்லது குடும்பத்தினரால் அதிக நன்மைகள் கிடைப்பதில்லை.

நட்சத்திர அதிதேவதை : விஸ்வகர்மா
பரிகார தெய்வம்  : முருகன்
நட்சத்திரகணம்  : ராட்சஸகணம்
விருட்சம்   : வில்வமரம்
மிருகம்   : ஆண்புலி
பட்சி   : மரங்கொத்தி
கோத்திரம்   : அகத்தியர்

Previous Post
Next Post