astrology dinamani
சனி பகவானின் பாதிப்பிலிருந்து மீள….
2017/12/11

சனி பகவானின் பாதிப்பிலிருந்து மீள….

நவரத்தினங்களில் ஒன்றாக விளங்கும் நீலம் அலுமினியம் டிரை ஆக்ஸைடு என்ற மூலப் பொருளால் ஆனது. இக்கல்லுக்கு நீல நிறத்தைத் தருவதற்கு டைட்டானியம் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. நீலம் கடினத்தன்மை அதிகமுடையதாக இருப்பதால் நீண்ட நாட்களுக்கு, பளபளப்பு குன்றாமல் இருக்கும்.

ஞானம், சாந்தம், பெருந்தன்மை, நற்பழக்கம், ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம். திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காக்கும்.

கணவன் மனைவிக்கிடையே அன்பைப் பெருக்கும். பற்றையும், பாசத்தையும் வளர்க்கும் தன்மை உடையது நீலக்கல். தியானத்திற்கு உகந்தது நீலம். ஆழ்மனதெளிவை கொடுக்கும். நீலக்கல்லை வெள்ளியில் பதித்து உடலில் படும்படி நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலில் அணிய  வேண்டும்.

கல்லீரல், வயிறு வீங்குதல், பித்தநோய், முடக்குவாதம், கபம் போன்ற பிணிகளைப் கட்டுப்படுத்தும் குணமுள்ளது.

சனிபகவானை அதிபதியாக கொண்ட மகரம், கும்பம் ராசிக்காரர்கள் மற்றும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இந்த கல்லை அணியலாம். சனி பகவான் பாதிப்பில் இருந்து மீள இந்த கல்லை பயன்படுத்தலாம்.

எண்கணித படி 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண், பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம் அணியலாம். மேலும் ராகுவின் எண் 4, 13, 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண், பெயர் எண் 4 உள்ளவர்களும் நீலம் அணியலாம்.

Previous Post
Next Post