astrology dinamani
சனிப் பெயர்ச்சி பலன்கள் 2017: விருச்சிகம்
2014/11/02

விருச்சிகம்

viruchikam

(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத அளவுக்கு அபிவிருத்தியைக் காண்பீர்கள், முக்கியமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு படிப்படியாக உயரும். திருமணமாகி புத்திரபாக்கியத்திற்கு ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.

உணவையும் உடற்பயிற்சியையும் சரியாக எடுத்தும் செய்தும் வருவீர்கள். மனக் கவலைகளிலிருந்து மீள, தியானம், பிராணாயாமம் செய்து உற்சாகமாக இருப்பீர்கள். குலதெய்வ பூஜையும் செய்து குலதெய்வத்தின் அனுக்கிரகத்தையும் தேடிக்கொள்வீர்கள். பெரியோர்களின் நட்பு தேடாமலேயே கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி ஒன்று உங்களைத் தேடி வந்து உங்களை திக்குமுக்காடச் செய்யும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். அசையாச் சொத்துக்கள் வாங்க, கடன் வாங்க நேரிடும். மறைமுக எதிரிகளையும் புறம்பேசுபவர்களையும் இனம் கண்டு ஒதுக்கி விடுவீர்கள்.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தினரிடமிருந்த வெறுப்புகள் மறைந்து மகிழ்ச்சியாக உறவாடுவீர்கள். தெய்வ வழிபாட்டையும் நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். பழைய நண்பர்களையும் சந்திப்பீர்கள். அவர்களால் செய்தொழிலில் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். உங்களின் தனிப்பட்ட ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தன்னடக்கத்துடன் போதுமென்ற மனதுடன் இருப்பீர்கள்.

சாதக பாதகங்களை ஆராய்ந்து உங்களின் நுண்ணறிவினால் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். பிறரைப் பற்றிய முக்கிய ரகசியங்களையும் அறிய முற்படுவீர்கள். எதிரிகளிடம் வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்ட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி நினைக்காமல் இன்று எது முக்கியமோ அதைச் செய்வீர்கள். இக்கட்டான தருணங்களில் உங்களின்சமயோசித புத்தி கைகொடுக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளிடம் கொண்டுள்ள நட்புறவு படிப்படியாக வளரும். வருமானமும் கூடத் தொடங்கும். நெடுநாள்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்களும் உங்களுக்கு தங்களாலான உதவிகளைச் செய்வார்கள். அதிகம் உழைக்க நேரிடும். வியாபாரிகளின் யுக்திகளை கூட்டாளிகள் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கொடுக்கல் வாங்கலில் இந்த தொய்வுகள் நீங்கி வருமானம் உயரும். வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். கூட்டாளிகள் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். பயிர்களில் பாதிப்புகள் குறையும். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களிடம் அக்கறையாக நடந்துகொள்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். புதிய விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தொண்டர்களின் அதிருப்திகளைச் சந்திக்க நேரிடும். அதனால் பொறுமையுடன் நடந்துகொள்ளவும். பெயரும் புகழும் உயரும். எதிரிகளின் பலம் குறையும். எதிர்பார்த்த பதவிகள் உங்களைத் தேடிவரும். கலைத்துறையினருக்கு திருப்திகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும். வருமானம் எதிர்பார்த்த அளவில் இருக்கும். கடுமையாக உழைப்பீர்கள், புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கச கலைஞர்களின்ஆதரவுடன் கலைப்பயணங்களைச் செய்வீர்கள்.

பெண்மணிகளுக்கு தன்னம்பிக்கை கூடும். உடன்பிறப்புகளும் ஏற்றம் காண்பார்கள். திடீர் பயணங்களும் அதிர்ஷ்டவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் புதிய வீட்டிற்கு மாற்றம் செய்யும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. மாணவமணிகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் மாணவராக வருவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மனப்புழுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களிடம் பெரிய கோரிக்கைகளை கொண்டு செல்ல வேண்டாம்.

பரிகாரம்: திருவேங்கடநாதரை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post