சனிப் பெயர்ச்சி பலன்கள் : துலாம்

துலாம்

thulamதுலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

சனி பகவான் உங்கள் ஜன்ம ராசியிலிருந்து இரண்டாம் வீடான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆகி ஏழரை நாட்டுச் சனி காலத்தில் பாத சனியாக சஞ்சரிக்கிறார்.

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் குடும்பத்துடன் வெளியூர் சென்று ஓய்வெடுத்துக்கொண்டு புத்துணர்ச்சியுடன் திரும்பி வருவீர்கள். செய்தொழிலில் முக்கியமான திருப்பங்களைக் காண்பீர்கள். எவரிடமும் விரோதம் பாராமல் இணக்கமாக செயல்பட்டு அனைவரின் நட்பையும் தக்க வைத்துக் கொள்வீர்கள்.

வருமானம் பல வழியிலும் பெருகக் காண்பீர்கள். பழைய கடினமான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு ராஜபாட்டையில் நடைபோடுவீர்கள். நண்பர்களைப் பற்றிய உங்கள் கணிப்புகள் சரியாக இருக்கும். மனதில் புதிய தெளிவுகளுடன் உங்கள் காரியங்களைச் செய்வீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பவர்கள் குடும்பத்துடன் இணைவார்கள். உபரி வருமானத்தில் அனாதை ஆசிரமங்கள் போன்ற தர்ம ஸ்தாபனங்களுக்கு நன்கொடை வழங்குவீர்கள்.

உங்களின் எதிர்காலத்திற்காக காப்பீடு திட்டங்களில் சேர்வீர்கள். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் அமைந்து வருமானம் பெருகும் காலகட்டமாக இது அமைகிறது.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்கள் கூட்டாளிகளிடமிருக்கும் தகராறுகளில் தலையிட்டு தீர்த்து வைப்பீர்கள். அவசரம் ஆத்திரம் கொள்ளாமல் சமநிலையுடன் உங்கள் காரியங்களைச் செய்வீர்கள். சுக துக்கங்கள் பாராட்டாமல் கடுமையாக பாடுபட்டு உழைப்பீர்கள். போட்டியாளர்களை நுட்பமான தந்திரங்களை பயன்படுத்தி வசியப்படுத்துவீர்கள். வேண்டுமென்றே உங்கள் மீது கொடுக்கப்பட்டிருந்த வழக்குகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். உங்கள் வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள் வீழ்ச்சி அடைந்துவிடும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி உண்டாகும். சிலர் புதிய வீடு வாகனங்களை வாங்குவார்கள். அரசாங்க அதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். அதேநேரம் தோல் நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதால் இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருக்கவும். சிலருக்கு எலும்புத் தேய்மான நோய்களும் உண்டாகலாம். மேலும் பெற்றோர்களும் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடலாம்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான திருப்பங்களை காண்பார்கள். சிலருக்கு வெளிமாநிலங்களுக்கு மாற்றலாகிச் செல்லும் நிலை ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். இருப்பினும் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டுத் தெளிவாகவே செய்யவும்.

வியாபாரிகள் புதிய முறைகளைப் பின்பற்றி வியாபாரத்தைப் பெருக்குவார்கள். கடையை சிறப்பாகச் சீரமைப்பார்கள். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ் வளரும்.

விவசாயிகளுக்கு கொள்முதல் அதிகரித்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். அதனால் உபரி வருமானத்தைப் பெருக்க காய்கறி, கிழங்குகள் போன்றவற்றை விளைவித்து பயன் பெறவும். சந்தையில் போட்டிக்குத் தகுந்தாற்போல் விலையை நிர்ணயித்து விற்றால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். கால்நடைகள் வைத்திருப்போர் அவற்றின் நலனில் அக்கறை செலுத்தி உழைத்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் பாராட்டும். இதனால் சிறப்பான பதவிகளைப் பெறுவீர்கள். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தையும் முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். அனாவசிய அலைச்சல்களும் இராது.

கலைத்துறையினர் நல்ல பலன்களைக் காண்பார்கள். அதேசமயம் நன்கு பரிசீலித்த பிறகே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். ஏனென்றால் ஏதாவதொரு பிரச்னை உருவாகலாம். எப்போதும் விழிப்புடன் இருந்து செயலாற்றுவதும் சக கலைஞர்களுடன் நட்பு பாராட்டுவதும் சிறப்பான பலனைத் தரும். அதேநேரம் கடுமையாக முயற்சி செய்தால்தான் வெற்றி உங்களைத் தேடி வரும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. தெய்வ பலத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். அதேநேரம் சகோதர சகோதரிகளிடம் சிறு மனக்கசப்புகள் ஏற்பட்டு விலகும். மேலும் யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.

மாணவமணிகள் கடுமையாக உழைத்து அதற்கேற்ற பலனைப் பெறுவார்கள். கல்வியில் உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கு உகந்த காலகட்டமாக இது அமைகிறது. வெளி விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடவும்.

பரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு சிறப்படையுங்கள்.

Previous Post
Next Post