சனிப் பெயர்ச்சி பலன்கள் : கன்னி

கன்னி

kanniகன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
சனி பகவான் உங்களின் தைரிய ஸ்தானத்திற்கு மாறி உங்களின் ஏழரை நாட்டுச் சஞ்சாரத்தை முடிக்கிறார்.2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ள காலகட்டத்தில் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ள குரு பகவானின் பார்வையை பெற்று சஞ்சரிக்கும் சனிபகவான் உங்கள் மனதிலிருந்த குழப்பங்களை நீங்கச் செய்வார். நீங்கள் தொடர்ந்து சந்தித்து வந்த தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் எதிர்பார்ப்புகள் கைகூடும், பொருளாதார நிலை சீரடைந்து படிப்படியாக வளரத் தொடங்கும். கடுமையான உடலுபாதைகளால் பீடிக்கப்படுவீர்கள். அதிலிருந்து மீள்வீர்கள். உழைப்பு வீணாகிறதே என்று புலம்பியவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

உற்றார் உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆன்மிக தர்ம காரியங்களைச் செய்வதன்மூலம் உங்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டுவீர்கள். குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். பூர்வீக வழியில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். நேர்முக எதிர்ப்புகள் கதிரவனைக்கண்ட பனிபோல் மறைந்துவிடும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். அதோடு பிள்ளைகளும் உங்கள் சொல் கேட்டு நடந்து உங்கள் மனம் குளிர வைப்பார்கள்.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் மாற்றங்களைச் செய்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். சிலருக்கு புதிய வீட்டுக்கு மாறிச் செல்லும் பாக்கியமும் உண்டாகும். பழைய கடன்கள் திரும்ப கைக்கு வந்து சேரும். உங்களின் பழைய விரோதிகள் தேடி வந்து பணிவார்கள். எல்லாச் செயல்களிலும் வெற்றி அடைந்து நிம்மதியாக படுத்தவுடன் தூக்கம் வரும் காலகட்டமாக இது அமைகிறது.

2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் புதிய சிந்தனைகளால் உயர்வடைவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு கூடும். ஒளிபெருந்திய கண்களுடனும் களை பொருந்திய முகத்துடனும் செயலாற்றுவீர்கள். புதிய ரகசியங்களை அறிவீர்கள். புரியாத புதிர்களுக்கும் விடை கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை உயரும். சமுகத்திற்கு உங்கள் உடலாலும் பொருளாலும் தொண்டாற்றுவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு தக்க ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்யும் காலகட்டமாக அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்வார்கள். வேலைகளை திட்டமிட்டுச் செய்து முடிப்பார்கள். உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தைப் பெறுவதற்கு எந்தத் தடையும் வராது. அதேநேரம் சக ஊழியர்களிடமிருந்து சிறுசிறு தொல்லைகளை அனுபவிக்க நேரிடும். அலுவலகத்தில் எவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டுத் தொழில் செய்தவர்கள் தனித்துத் தொழில் செய்யும் சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்த்த வங்கிக் கடன்களைப் பெற்று வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்க

நினைப்பீர்கள்.

விவசாயிகள் விளைச்சல் நிலங்களில் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். விவசாயத் தொழிலாளர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்வீர்கள். அதே

சமயம் சிலருக்கு வழக்கினால் மன உளைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். நன்கு யோசித்து புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். மற்றபடி நன்றாக பாடுபட்டு உழைக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு பெரும்பாலான காலகட்டத்தில் கிடைக்கும். மற்றபடி கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை அறிந்து எச்சரிக்கையுடன் அனுப்பவும். மற்றவர்களுக்கு முன் ஜாமின் போட வேண்டாம்.

கலைத்துறையினருக்கு சிறு தடைகளுக்குப் பிறகு ஒப்பந்தங்கள் கைகூடும். பணவரவு படிப்படியாக உயரத் தொடங்கும். ரசிகர்களும் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். மனதிற்குப் பிடித்த வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சக கலைஞர்களின் உதவிகள் கிடைக்கும்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் பற்றும் பாசமும் அதிகரிக்கும். கணவரிடம் அன்போடு நடந்து கொண்டு எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். விலை மதிப்புள்ள பொருள்களை வாங்குவீர்கள். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தில் நப்புடன் இருப்பது நன்மை தரும். அதேநேரம் குடும்பத்தில் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும்.

மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தவும். படிப்பதை மனதில் இறுத்திக் கொள்ள புதுப்புது ஐடியாக்கள் தோன்றும். மற்றபடி பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். யோகா மற்றும் பிராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனவளம் மற்றும் உடல்நலத்தைப் பெருக்கிக் கொள்ளுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post