astrology dinamani
சனிப் பெயர்ச்சி பலன்கள் 2017: கும்பம்
2014/11/02

கும்பம்

kumbam

(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். காரியங்கள் மடமடவென்று நடக்கும். எதிர்ப்புகளை சமயோசிதப் புத்தியால் தகர்த்தெறிவீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகளை அடைவீர்கள். நெடுநாளாக வாட்டிக் கொண்டிருந்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

புதிய முதலீடுகளை நண்பர்களுடன் சேர்ந்து செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் பெயர், புகழ், செல்வாக்கு கூடும். புதிய பொறுப்புகளும் தேடி வரும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். தன்னம்பிக்கையுடனும் முக மலர்ச்சியுடனும் வலம் வருவீர்கள். குடும்பத்திலும் உங்கள் செல்வாக்கு உயரும். பூர்வீகச் சொத்துகளை அனுபவிக்கத்தக்க வகையில் உங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். ஆணவத்தையும்,  எதிர்பார்ப்பையும் விட்டொழித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் செயல்படும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் பெரிய அளவில் திட்டங்களைப் போட்டு பெரும் புகழை அடைந்து விடுவீர்கள். செய்தொழிலை விரிவுபடுத்த வங்கிகளிடமிருந்து கடன்கள்
கிடைக்கும். தொல்லை கொடுத்து வந்த நண்பர்கள் தாங்களாகவே விலகி விடுவார்கள். குடும்பத்திலிருந்த சண்டை சச்சரவுகளும் தீர்ந்து விடும். உற்றார், உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அதேநேரம் வருமானத்திற்குத் தகுந்தாற்போல் புதுப் புதுச் செலவுகளும் உங்கள் முன் வந்து நிற்கும். சேவை மனப்பான்மையுடன் ஆன்மிக தர்ம பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடல் கடந்து சென்று வசிக்கும் வாய்ப்புகளும் சிலருக்கு ஏற்படும். தனித்து முடிவெடுக்க விரும்பும் நீங்கள் மற்றவர்களையும் கலந்தாலோசித்து நல்ல முடிவுகளை எடுக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். அதோடு சக ஊழியர்களின் ஆதரவும் தொடர்ந்து கிடைப்பதால் அந்த காரியங்கள் அனைத்தும் பிரச்னையின்றி நிறைவேறும். தெளிவான மனத்துடன் பணியாற்றுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களாலும் நன்மைகள் கிடைக்கும். வியாபாரிகள் வளர்ச்சியைக் காண்பார்கள். தொடர்ந்து வந்த தடைகள் நீங்கி வெற்றிகள் சூழும். அனைவரும் உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். கூட்டு முயற்சிகள் பலன் தரும்.

புதிய வியாபாரம், புதிய சந்தைகளை நாடும் எண்ணங்கள் மேலோங்கும். அதோடு கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் லாபகரமாகவே இருக்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். ஆனாலும் பயிர்களில் புழுபூச்சிகளின் பாதிப்பு தெரியவந்தால் உடனே பூச்சிக்கொல்லி மருந்தை உபயோகிக்கவும். மற்றபடி புதிய விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் முன்னேற்றமடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல்வாதிகளின் கனவுகள் நனவாகும். உங்கள் செயல்களுக்கு எந்த நாளும் இல்லாத அளவுக்குப் புதிய அங்கீகாரம் கிடைத்து அதிர்ஷ்டசாலியாக வலம் வருவீர்கள். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்து மகிழ்ச்சியுடன் செயலாற்றுவீர்கள். எதிரிகளும் விலகி விடுவார்கள். கலைத்துறையினர் இந்த காலகட்டத்தில் சிறிது ஏற்ற இறக்கங்கள் காண்பார்கள். துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டாலும் ஓரளவு புகழ் பெறுவீர்கள். மற்றபடி வருமானத்திற்குக் குறைவு ஏற்படாது. சக கலைஞர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும்.

பெண்மணிகள் கடமை உணர்ச்சியுடன் இருந்து இல்லத்தின் பொறுப்புகளை நடத்திச் செல்வார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெற இருந்த தடைகள் விலகும். கணவரிடம் ஒற்றுமை
அதிகரிக்கும். இருப்பினும் குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றி மன அமைதியைக் குறைக்கும். யோகா, பிராணயாமம் போன்றவற்றைச் செய்து மனப்புழுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள்.

மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். அதனால் நண்பர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுங்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post