astrology dinamani
சனிப் பெயர்ச்சி பலன்கள் : மகரம்
2014/11/02

மகரம்

makaram

(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள். இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு உழைப்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.  குடும்பத்தாருடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்விகச் சொத்துகளிலிருந்தும் வருமானம் வரத் தொடங்கும். வருமானத்தைப் பெருக்க இரட்டிப்பாக உழைப்பீர்கள். நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் திடீரென்று நடக்கத் தொடங்கிவிடும். உடலில் இருந்த நோய்கள் மறைந்து பீடு நடை போடுவீர்கள். உணவு விஷயங்களில் சரியாக இருப்பீர்கள். போட்டி பொறாமைகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். உங்கள் கௌரவத்திற்கு எந்தப் பங்கமும் வராது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பதுபோல் உங்கள் கஷ்டங்கள் விலகி ஓடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் நேர்மறையான நல்லெண்ணங்களை மனதில் கொண்டு சமூகத்திற்கு நன்மை செய்ய விழைவீர்கள். உங்களை நம்பி வருபவர்களை அன்புடன் ஆதரிப்பீர்கள். முடிவுகளை அடைவதற்கு ஏற்ற வழிமுறைகளைச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு மாறுவார்கள். மூத்த சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதேநேரம் எவரையும் நம்பாமல் தனித்துச் செயல்படவும். பங்கு வர்த்தகம் மூலமாகவும் மிதமான லாபமிருக்கும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்காததால் மேல் முறையீடு செய்வீர்கள். அதேநேரம் சமரசமாகச் செல்வது நன்மை பயக்கும். ஆதலால் அவர்களைக் கண்டும் காணாமல் இருந்து கண்காணிக்கவும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டும் கிட்டும். மேலதிகாரிகள் உங்கள் செயல்களைப் பாராட்டுவார்கள். தைரியத்துடன் உங்கள் வேலைகளில் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல விரும்புவோர் அத்தகைய வாய்ப்புகளைப் பெறும் காலகட்டமாக இது அமைகிறது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும்.

வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் படிப்படியாக நீங்கி விடும். அதனால் நஷ்டங்களை ஈடு செய்ய கடுமையாக உழைப்பீர்கள். அதேநேரம் கூட்டாளிகளைக் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ய
வேண்டாம். தொழிலில் சிறிது தடைகள் ஏற்பட்டாலும் எப்படியும் இலக்குகளை எட்டி விடுவீர்கள். விவசாயிகளுக்கு வர வேண்டிய குத்தகை பாக்கிகள் கிடைக்கும். வருமானம் உயரத் தொடங்கும். புதிய நிலங்களை வாங்க முயற்சி செய்வீர்கள். பூச்சிக்கொல்லி மருந்துக்குப் பெரிதாகச் செலவு எதுவும் ஏற்படாது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மாற்றுப் பயிர் பயிர் செய்வதன் மூலம் மேலும் லாபத்தை அள்ளுவீர்கள்.

அரசியல்வாதிகள் மீது எதிர்க்கட்சியினர் வீண் அவதூறுகளைச் சுமத்த நினைப்பார்கள். அதனால் இந்த காலகட்டத்தில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். மற்றபடி உங்கள் பெயரும் புகழும் உயரும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத வகையில் வெற்றிகள் கிடைக்கும். உங்களின் புதிய எண்ணங்கள் மக்களிடம் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். உங்களின் முனைப்பான செயல்பாட்டால் உயர்ந்த நிலைக்குச் செல்வீர்கள். அதேநேரம் புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும்.

பெண்மணிகளுக்கு இந்த காலகட்டத்தில் கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடமிருந்து உங்களுக்கு நல்ல செய்தி வரும். அதேநேரம் மற்றவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்க வேண்டாம். மற்றபடி பணவரவுடன் விரும்பிய இடமாற்றங்களை வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் பெறுவார்கள் என்றால் மிகையாகாது. மாணவமணிகள் கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி அடைவார்கள். நல்ல மதிப்பெண்களையும் அள்ளுவார்கள். சிலருக்கு அரசாங்க உதவி போன்றவை கிடைக்கும். வெளியூர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் உண்டாகும். விளையாட்டில் சாதனை செய்வீர்கள்.

பரிகாரம்: ராதா கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post