astrology dinamani
சனிப் பெயர்ச்சி பலன்கள் 2017 : தனுசு
2014/11/02

தனுசு

dhanusu

(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் ஒளிவு மறைவு இன்றி பேசும் நீங்கள் அடுத்தவர்களின் எண்ணங்களை அறிந்து சமயோஜிதமாக பேசத் தொடங்குவீர்கள். செய்தொழிலிலும் புத்திசாலித்தனமான முடிவுகளையும் எடுக்கத் தொடங்குவீர்கள். சமூகத்தில் உயர்ந்தவர்களிடம் நட்பு கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையாக இருக்கும். புதிய வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக்
கொள்வீர்கள்.

உடன்பிறந்தோரும் உங்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள். அன்னை வழியில் சில அனுகூலங்களும் உண்டாகும். மனதில் நம்பிக்கை வளரும். எவருடனும் வெளிப்படையாகப் பேச
வேண்டாம். அலைபாயும் மனதையும் கட்டுப்படுத்தவும். நீங்கள் செய்யும் வீண் யோசனைகள் உங்கள் வலிமையைக் குறைக்கும். மற்றபடி முதுகுக்குப் பின்னால் குறை சொல்பவர்களைக் கண்டுகொள்ள
வேண்டாம். மற்றபடி பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும். மனதில் நெருடிக்கொண்டிருந்த பழைய தவறு ஒன்று இந்த காலகட்டத்தில் வெளியில் வர முடியாத அளவுக்கு மறைந்து விடும். மனதை ஒரு நிலைப்படுத்த தியானம், பிராணயாமம் போன்றவற்றைச் செய்யவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் அவநம்பிக்கை மறைந்து தன்னம்பிக்கை உயரத் தொடங்கும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூர்வீகச்சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் மறைந்து நன்மைகள் வரத் தொடங்கும். திருமண வயதில் உள்ள யுவ யுவதிகளுக்கு திருமண பாக்கியம் உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு
மழலைச் செல்வம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் அதிர்ஷ்ட தேவதையின் அருட்பார்வை உங்களுக்குக் கிடைக்கும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளின் சுமை சிறிது அதிகரித்தாலும் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். அதேநேரத்தில் பணியிட மாற்றம் உண்டாகும். உங்களின் வேலைகளை சக ஊழியர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உங்கள் மேலதிகாரிகளின் எண்ணங்களை புரிந்துகொண்டு செயல்படுங்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் அனைத்தும் சீராக இருக்கும்.

அதேநேரம் அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும். கூட்டாளிகளிடம் முக்கிய ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் தகுந்த நேரத்தில் விதைத்து விளைச்சலைக் கூட்டிக்கொள்ள முற்படுவார்கள். இதனால் விற்பனையும் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும். அதேநேரம் கால்நடைகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். விவசாயத் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் வெற்றி காண்பார்கள். நண்பர்களால் உங்கள் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் உடற்சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தகுதிக்கேற்ற பொறுப்புகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புகழ் கூடும். செல்வாக்கு அதிகரிக்கும். அதேசமயம் திட்டமிட்ட காரியங்கள் சிறிய தடங்கலுடன்தான் நிறைவேறும். புதிய வாய்ப்புகளைப் பெற சில தியாகங்களைச் செய்ய வேண்டி வரும். அதோடு பயணங்களிலும் சிறிது செலவுகள் ஏற்படும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள்.

கணவரைப் புரிந்துகொண்டு நடப்பீர்கள். உற்றார் உறவினர்களின் நன்மதிப்புக்குப் பாத்திரமாவீர்கள். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். புனிதத் தலங்களுக்கும் சென்று வருவீர்கள். சிலருக்கு திடீரென்று திருமண வாய்ப்புகள் கை கூடும். மாணவமணிகள் படிப்பில் ஓரளவு நல்ல மதிப்பெண்களைப் பெற்றாலும் ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். மற்றபடி பெற்றோரின் ஆதரவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். அதேநேரம் விளையாடும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.

Previous Post
Next Post