சனிப் பெயர்ச்சி பலன்கள் : மேஷம்

மேஷம்

mesham
 மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)சனி பகவான் உங்களின் நட்பு ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானமான எட்டாம் ராசிக்கு மாறுகிறார். இதை அஷ்டம சனி காலம் என்று அழைக்கிறோம். 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் அனைத்துக் காரியங்களையும் நல்லதை நினைத்து கவனத்துடன் செயல்படுத்துவீர்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.

சிலருக்கு வண்டி வாகனம், ஆடை, ஆபரணம் வாங்கும் யோகங்களும் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். உங்களின் ஆற்றல் வெளிப்படும். செய்தொழிலுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். வங்கிகளிடமிருந்து வீடு வாங்க கடன்கள் கிடைக்கும். சிக்கலான விஷயங்களுக்கு சரியான தீர்வு காண்பீர்கள். இறை வழிபாடுகளின் மூலம் உங்கள் ஆன்ம பலத்தைக் கூட்டிக்கொள்வீர்கள். தொலைதூரப் பயணங்கள் செய்து வருமானத்தை பெருக்குவீர்கள்.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் சுப காரியங்கள் சிறிது தாமதத்திற்குப்பிறகு நல்லபடியாக நடந்தேறும். உற்சாகமின்மை, விட்டேத்தியான மனோபாவத்தில் இருந்தவர்கள், தங்களின் சுற்றுச்சூழல் மாறக் காண்பார்கள். இதனால் மனதில் தெளிவுடன் உற்சாகமாகப் பணிபுரிவார்கள். அரை மனதாகச்செய்த காரியங்களை முழுமனதுடன் செய்யத் தொடங்குவீர்கள். இல்லத்தில் புதிய வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். பங்குதாரர்கள், நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நோய்கள் அகலும். ஆரோக்கியம் மேம்படும். யோகா, பிராணாயாமம் போன்றவைகள் செய்வீர்கள். வாழ்க்கைத்தரம் உயரும்.

2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் உள்ள காலத்தில் வருமானம் குறைந்தாலும் கடன் தவணைகளை சரியாகச் செலுத்துவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை புகுத்துவீர்கள். பெற்றோர் வழியில் சிறு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தேவையற்ற உதவிகளைச் செய்யாமல் “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் பணியாற்றவும். மேலும் எவருக்கும் கடன் கொடுப்பதோ முன் ஜாமீன் கொடுப்பதோ கூடாது. உங்கள் நல்ல பெயர் கெடாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்க அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மேலும் பணியிலும் வேலை பளு குறையும். பணவரவு இந்த காலம் முழுவதும் சரளமாகவே இருக்கும். அதேநேரம் பணியில் விரும்பிய இடமாற்றங்களை எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது.

வியாபாரிகளுக்கு சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். கடையை அழகு படுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். புதிய முதலீடுகளுக்கான முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன்களும் கிடைக்கும். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். வியாபாரத்தை பெருக்குவதன் பொருட்டு நண்பர்களுடன் இணைந்து திட்டம் தீட்டுவீர்கள்.

விவசாயிகள் உப தொழில்களில் சிறிது கவனம் செலுத்துவீர்கள். இதனால் பயிர் விளைச்சலில் ஏற்படும் வருமானக் குறைவுகளை ஈடுகட்ட முடியும். அரசாங்க மானியங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். மேலும் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை பயிரிட்டு பலன் பெறலாம். விவசாயத் தொழிலாளர்களிடம் அனுசரணையோடு நடந்து கொண்டால் மேலும் நன்மை அடையலாம். பூச்சிகளால் ஏற்படும் சிறு பாதிப்புகளிலும் கவனமாக இருக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் சாதனை செய்வீர்கள். கட்சியில் முக்கிய பொறுப்புகளும் கிடைக்கும். எதிர்கட்சியினரையும் உங்கள் வாக்கு சாதுர்யத்தால் கவருவீர்கள். அதனால் உங்கள் செயல்கள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் வெளிப்படையாகவே இருக்கும்.

கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். செயல்களை நேர்த்தியுடன் செய்வீர்கள். புதிய நண்பர்களால் பலனடைவீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் இருப்பீர்கள். சக கலைஞர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வர். புதிய வாய்ப்புகளைப் பெற்று உற்சாகமடைவீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால், குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கலாம். அதோடு சுப நிகழ்ச்சிகளும் கூடி வரும். குழந்தைகள் உங்கள் சொல்கேட்டு நடந்து கொள்வர். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நன்மை பயக்கும். ஆகார விஷயங்களில் கவனமாக இருந்து வயிறு சம்பந்தமான உபாதைகளிலிருந்து காத்துக் கொள்ளவும்.

மாணவமணிகள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவர். பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் நல்ல பெயர் எடுப்பார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். கவனம் சிதறாமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் மிகுந்த பலன் உண்டு. இறைபக்தியை வளர்த்துக் கொள்வதால் மனதில் நம்பிக்கை பிறக்கும். படிப்பு மற்றும் விளையாட்டில் முதன்மை பெறும் வாய்ப்பு கூடும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post