astro_dinamani
கேட்டை நட்சத்திரப் பலன்கள் (விருச்சிகம்)
2013/11/23

வசீகரமான தோற்றம் உள்ளவர்கள். ரகசியம் காக்கத் தெரியாதவர்கள். எதையும் வெளிப்படையாக பேசிவிடும் குணம் உள்ளவர்கள். தன் சொந்த குடும்ப பிரச்சனைகளைக்கூட மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி அலுத்துக்கொள்வார்கள்.
பிடிவாத குணம்  இருக்கும். அந்த பிடிவாதத்தாலேயே பல்வேறு  பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

பிறர் யோசனைகளை ஏற்காமல் தங்கள்  சொந்த விருப்பங்களுக்கு ஏற்பவே நடப்பார்கள். சந்தர்ப்பம், சூழ்நிலை இவற்றை அனுசரிக்காமல் திடீர் முடிவுகளை எடுப்பார்கள். அதனால் பல சந்தர்ப்பங்களில் இக்கட்டான  சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். இவர்களுக்கு ஆரம்பகால  வாழ்க்கை சுகமாக அமைவதில்லை. பிறந்த இடம் விட்டு வேறு இடங்களில் தான் வசிக்கிறார்கள்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி வாழ்வார்கள் என்ற பழமொழியும் உண்டு.

நட்சத்திர அதிதேவதை  :- இந்திரன்
பரிகார தெய்வம் –   : பெருமாள்
நட்சத்திர கணம்  :- ராட்ஷச கணம்
விருட்சம்    :- பலா மரம்(பால் மரம்)
மிருகம்    :- ஆண் மான்
பட்சி    :- சக்கிரவாகம்
கோத்திரம் –  : அகத்தியர்

Previous Post
Next Post