astro_dinamani
குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு வாஸ்து சாஸ்திரம் காரணமா?
2017/06/20

குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு வாஸ்து சாஸ்திரம் காரணமா?

குழந்தை பாக்கியம் தள்ளிப்போவதற்கும், குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போவதற்கும் வாஸ்து சாஸ்திரம் ஒரு காரணமா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலை சொல் கேளாதவர். இது சான்றோர் வாக்கு. ஒரு குடும்பத்தில் திருமணமான இளம் தம்பதியினருக்கு திருமணமான சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் குழந்தை பாக்கியம் என்பது கிடைக்க வேண்டும். குழந்தை பாக்கியம் தள்ளிப்போகும் பட்சத்தில் அந்தப் பெண்ணிற்கு இந்தச் சமுதாயம் கொடுக்கும் பட்டம் மலடி என்பார்கள்.

குழந்தை பாக்கியத்திற்காக அந்த காலத்தில் அரசமரத்தைச் சுற்றிய காலங்கள் உண்டு. ஆனால் இன்று அடுக்குமாடி மருத்துவமனைகள் ஏராளம் ஏராளம். மருத்துவரை நம்பி பல லட்சங்களை இழந்தும், மழலை பாக்கியம் கிடைப்பதே சில பேருக்கு மட்டும் தான். இன்னும் சில பேர் பல முயற்சிகள் எடுத்துப் பலனளிக்காமல், கடைசியாக தனக்கும் தன்னுடைய சொத்திற்கும், தன்னைக் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்வதற்காக, யாரோ ஒருவருடைய குழந்தையை தத்து எடுத்துக் கொள்கிறார்கள். இவைகள் யாவும் நமது சமுதாயத்தில் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.

நமது வீட்டில் எந்தப் பகுதியில் என்ன தவறு இருந்தால் இதுபோல் ஏற்படுகிறது என்பதைப் பார்ப்போம்….

• கிழக்குப் பகுதி முழுவது அடைப்பட்ட வீட்டு அமைப்பு இருத்தல்.

• தென்கிழக்கு பகுதியில் தெரு பார்வை அமைப்புகள்.

• செப்டிக்டேங்க் தென்கிழக்கு பகுதியில் மற்றும் தென்மேற்கு பகுதியில் இருத்தல்.

• கோபுர கேஸ், தென்கிழக்கு பகுதியில் மற்றும் தென்மேற்கு பகுதியில் இருப்பது.

• உள் மூலைப்படி அமைப்புகள் இருப்பது.

• போர், கிணறு, சம்பு அல்லது தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புகள் தென்மேற்கு, வடமேற்கு பகுதியில் இருத்தல்.

இது தவிர வீட்டிற்குள்ளும் வீட்டிற்கு வெளிப்புற பகுதியிலும் தவறான அமைப்புகள் இருப்பதால் வீட்டில் நிகழ வேண்டிய சுபகாரியங்கள் அனைத்தும் தடைப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாகப் பிரபல வாஸ்து நிபுணர் கிருஷ்ண ராஜன் கூறுகிறார்.

Previous Post
Next Post

Leave a comment