astrology dinamani
கார்த்திகையில் சிவபெருமானுக்கு விஷேசமான பொறி உருண்டை
2018/11/23

கார்த்திகையில் சிவபெருமானுக்கு விஷேசமான பொறி உருண்டை

தீப வழிபாடு தமிழர்களின் வழிபாடு, இது பண்டைய காலத்திலிருந்து வழிபடப்பட்டு வருகின்றது. தீபம் ஏற்றுவதால் அஞ்ஞான இருள் நீங்கி, மெஞ்ஞான வெளிச்சம் கிடைக்கின்றது. இதுவே உயிர்களுக்குப் பேரானந்தத்தைத் தரக்கூடியது.

தீபவழிபாடு பற்றி சங்க இலக்கியங்களில் இருந்து திருஞானசம்பந்தர் தேவாரம் வரை பல குறிப்புகள் காணப்படுகின்றன. வழிபாட்டுக்கு மட்டும் உகந்ததாக அல்லாமல், சிவ பெருமானுக்கு அமுதன்னம், இனிப்பு வகையான பொறி உருண்டை ஆகியவற்றை படைத்து வழிபடுகின்றனர்.

கார்த்திகை தீப நாளன்று, தேங்காய் துண்டு, சீனி கலந்த பொரி உருண்டைகளை செய்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பொரியிலுள்ள வெண்மை நிறம், சிவனையும், வெல்லம் பக்தியையும், தேங்காய் மாவலியையும் குறிப்பதாக ஐதீகம்.

முருக கடவுள் கார்த்திகேயன், பொறி வடிவத்தில் தோன்றியதால், அதன் அடையாளமாக பொரி உருண்டை படைப்பதாக சொல்வோரும் உண்டு. சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உண்டு. ஆதலால், இதற்கு, சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது. சிவ பெருமானை ஜோதி சொரூபமாக காணவே சொக்கப்பனை கொளுத்து கின்றனர்.

Previous Post
Next Post