astro_dinamani
கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்
2017/09/06

கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கல்விக்கு அதிபதியான புத பகவான் நவக்கிரகங்களில் நான்காவதாக இடம் பெற்றிருப்பவர். மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாத போதும், புதன் அதைச் சரிசெய்து நமக்கு அருள் செய்வார். இதன் காரணமாகவே, புதனுக்குக் கிரக பீடாஹரன் என்ற பெயரும் உண்டு.

அறிவுத் தெய்வமான இவர், கையில் புத்தகம் வைத்திருப்பார். இவரை வழிபட்டால், கவிபாடும் திறமை கிடைக்குமாம். ஒருவர் ஜாதகத்தில் இவர் வலுப் பெற்று இருந்தால் கல்வி ஞானத்தில் ஜொலிப்பார்களாம்.

புதன் காயத்திரி

‘ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதஹ் ப்ரசோதயாத்’

பொருள் – யானைக் கொடியை கொண்ட புத பகவானை அறிவோமாக. நன்மை அளிக்கும் கரங்களைக் கொண்டவனின் மீது தியானம் செய்கிறோம். தெய்வீகமான அவன் நம்மைக் காத்து அருள்புரிவானாக.

ப்ரிங்கு கலிகா ச்யாம்
ருபேணா ப்ரதிமம் புதம்
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம் யஹம்

தினமும் 108 முறை இந்த மந்திரத்தைச் சொல்லி வந்தால், அறிவில் சிறந்து விளங்கலாம்.

Previous Post
Next Post

Leave a comment