astro_dinamani
கடன் பிரச்னைக்கும், வாஸ்து-சாஸ்திரத்திற்கும் தொடர்புண்டா?
2017/10/05

கடன் பிரச்னைக்கும், வாஸ்து-சாஸ்திரத்திற்கும் தொடர்புண்டா?

ஒருவர் கடன் சுமைக்கு ஆளாவதற்கும், அவர் குடியிருக்கும் வீட்டிற்கும் வாஸ்து சாஸ்திரத்தில் ஏதேனும் தொடர்புள்ளதா என்பதைப் பார்ப்போம்.

நமக்குத் தெரிந்தவர்கள், நம் நண்பர்கள் எனப் பல பேர் தன்னுடைய வாழ்நாளில் நடந்த அனுபவங்களைச் சொல்ல நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது, நான் இந்த இடத்திற்கு அலுவலகத்தை

மாற்றிய பிறகுதான் கடன் ஏற்பட்டது. நான் இடத்தை வாங்கிய பிறகுதான் கடன் வந்தது, நான் இந்தக் கட்டிடத்தை கட்ட ஆரம்பித்த பிறகுதான் என் சொத்து அழிந்தது. என்று பலர் சொல்லக்

கேட்டிருப்போம். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் வாஸ்து தானா? வாஸ்துப்படி தவறான அமைப்புகளே இதற்குக் காரணமா?

எந்தெந்த அமைப்புகள் இருந்தால் கடன் ஏற்படும்? என்பதைத் தெரிந்துகொள்வோம்.

• தென்மேற்கு பகுதியில் பெட்ரூம் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற அமைப்புகள் இருந்தால் அது கடனின் கொண்டு சேர்க்கும்.

• வடக்கு முழுவதும் மூடிய அமைப்பாக இருத்தல், தன் வீட்டின் வடக்கு பக்கம் மற்றொருவருடைய கட்டிடத்தில் சேர்ந்த அமைப்பாக இருப்பது.

• தெற்கு பகுதியில் காலி இடம் அதிகமாகவும், வடக்கு பகுதியில் காலி இடம் மிக மிகக் குறைவானதாக உள்ள அமைப்பு.

• தென்மேற்கு பகுதியில் ஆறு, ஓடை, குளம், குட்டை, கிணறு போன்ற பள்ளமான அமைப்புகள் இருக்கக் கூடாது.

• தென்மேற்கு தெருகுத்து, தெருபார்வை போன்ற அமைப்புகள் இருத்தல்.

• வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் சாலை உயரமாகவும், வீடு பள்ளத்தில் இருந்தாலும் கடன் சுமை ஏற்படும்.

• வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மேம்பாலம் வருவது.

• வீட்டில் தென்மேற்கு வாசல், படி அமைப்புகள் வருதல்.

• வடமேற்கு பகுதியில் பள்ளமான அமைப்புகளை கிணறு, போர், பம்ப் போன்றவைகள் வருதல்.

இதுபோல் இன்னும் 16 அமைப்புகள் இருக்கின்றன. கடன்பட்டவர்கள் வீட்டை ஆராய்ந்தால் இங்குக் குறிப்பிட்ட அமைப்பைகளில் ஏதேனும் ஒன்று தான் இருக்கும். எனவே, வீடு கட்டும் போது நல்ல

வாஸ்து நிபுணரை அணுகி வீடு கட்ட எந்தவித பிரச்னையும் இன்றி நிம்மதியாக வாழலாம்.

Previous Post
Next Post

Leave a comment